பாடல் #34374
நான் துதிக்கும் தேவனே
🔤 Naan Thuthikkum Devanae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் துதிக்கும் தேவனே நீர் மௌனமாயிராதேயும் கதறி சொல்லும் வார்த்தைகளை கவனியும் -நான் 1.என் ஏக்கங்களெல்லாம் உமக்கு முன்னே இருக்குது என் தவிப்பெல்லாம் உமக்கு மறைவாய் இல்லை என் உள்ளம் குழம்பி அலைகிறதே என் பெலன் என்னிலே இல்லையே 2.உமது கோபத்தால் எனக்குள் ஆரோக்கியம் இல்லை எனது பாவத்தால் எலும்பில் சுகம் இல்லை தலைக்கு மேலே அக்கிரமம் பெருகினதே தாங்க முடியா பாரச் சுமையானதே 3.நான் வேதனைப்பட்டு என்னில் ஒடுங்கி போனேன் துக்கத்தோடே நாள் முழுதும் திரிகிறேன் கர்த்தாவே என்னை கைவிடாதேயும் எனக்கு உதவி செய்ய சீக்கிரம் வாரும் 4.புது பாடல் எனக்கு தந்தீர் உம் நாமம் பாட பாட அபிஷேகம் எனக்கு தந்தீர் சாத்தானை ஜெய்த்து வாழ 5.கல்விமானின் நாவை நீர் எனக்கு தந்தீரையா திக்கு வாயை மாற்றி உம்மை துதிக்க செய்தீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thuthikkum Devanae Neer Maunamaayiraathaeyum Kathari Sollum Vaartthaigalai Kavaniyum -naan 1.en Aekkanggalellaam Umakku Munnae Irukkuthu En Thavippellaam Umakku Maraivaay Illai En Ullam Kuzhampi Alaikirathae En Pelan Ennilae Illaiyae 2.umathu Kobatthaal Enakkul Aarokkiyam Illai Enathu Paavatthaal Elumpil Sugam Illai Thalaikku Maelae Akkiramam Perukinathae Thaangga Mutiyaa Paarach Sumaiyaanathae 3.naan Vaedhanaippattu Ennil Otungki Ponaen Thukkatthotae Naal Muzhuthum Thirikiraen Kartthaavae Ennai Kaivitaathaeyum Enakku Udhavi Seyya Seekkiram Vaarum 4.puthu Paadal Enakku Thantheer Um Naamam Paada Paada Apishaegam Enakku Thantheer Saatthaanai Jeytthu Vaazha 5.kalvimaanin Naavai Neer Enakku Thantheeraiyaa Thikku Vaayai Maarri Ummai Thuthikka Seytheeraiyaa