பாடல் #34358
தேவனே நீர் என்னுடைய
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
தேவனே நீர் என்னுடைய தேவன் மரண பரியந்தம் என்னை நடத்திடுவீரே 1.எந்தன் காலை மானின் காலை போலாக்கினீர் நீதியின் பாதையிலே தினம் நடத்துடுகின்றீர் புல்லுள்ள இடங்களில் அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை தினம் கொண்டு போய் விடுகிறீர் 2.எந்த நிலையிலும் மனரம்மியமாக நான் இருந்திட போதித்து நடத்திடுகின்றீர் உயர்விலும் தாழ்விலும் குறைவிலும் நிறைவிலும் போதுமென்ற மனநிலை தருகின்றீர் 3.வறட்சியான காலத்தில் என் ஆத்துமாவை திருப்தியாக்கி எலும்புகளை நிணமாக்குவீர் வற்றாத ஊற்றைபோல் நீரருகின் தோட்டம் போல் நித்தமும் நடத்தி செல்கிறீர்