பாடல் #34353
தேசமே பயப்படாதே
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார் கலங்காதே 1.துன்பங்களை துயரங்களை நீயும் சந்தித்தாயோ …. இன்பத்தையும் சமாதானத்தையும் நன்மையையும் தந்திடுவார் உன் இயேசு தந்திடுவார் 2.இயற்கையினால் மனுஷர்களால் பேரழிவுகளா ….. இனி கொடுமைகளும் அழிவுகளும் உன் எல்லைகளில் வந்திடாது ஒரு பொல்லாப்பும் நேரிடாது 3.பஞ்சங்களால் கொள்ளை நோய்களினால் நீயும் அழுகின்றாயோ … ஆசீர்வாதத்தால் ஆரோக்கியத்தால் உன்னை நிரப்பி நடத்திடுவார் உன்னை சுகமாக்கி நடத்திடுவார்