பாடல் #34336
சிலுவையினடியில்
🔤 Siluvaiyinatiyil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையினடியில் காத்திருக்கின்றேன் இரக்கம் செய்யுமையா - எனக்கு இரக்கம் செய்யுமையா 1.வேதனையால் உள்ளம் தவிக்கிறதே வலியினால் உடலும் துடிக்கிறதே நோயினால் சிறைப்பட்டேன் சிறுமைப்பட்டேன் சிறைக்கதவை திறந்தருளும் - தேவா விடுதலை தந்தருளும் 2.எனக்காக முள்முடி தாங்கினீரே எனக்காக ஆணிகள் ஏற்றீரே என்னால் உம் இதயம் நொறுங்கினதே இயேசுவே இரங்கிடுமே -என்னை கிருபையாய் மன்னித்திடுமே 3.நாவினால் பாவம் செய்யாமலே உதடுகளின் வாசலை காத்தருளும் சோதனை என்னை சூழும்போது ஜெயித்திட கிருபை தாரும் -தேவா உமது பெலன் தாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyinatiyil Kaatthirukkinraen Irakkam Seyyumaiyaa - Enakku Irakkam Seyyumaiyaa 1.vaedhanaiyaal Ullam Thavikkirathae Valiyinaal Udalum Thutikkirathae Noyinaal Siraippattaen Sirumaippattaen Siraikkathavai Thirandharulum - Thaevaa Vitudhalai Thandharulum 2.enakkaaga Mulmuti Thaangkineerae Enakkaaga Aanigal Aerreerae Ennaal Um Idhayam Norungkinathae Yesuvae Irangkitumae -ennai Kirupaiyaay Mannitthitumae 3.naavinaal Paavam Seyyaamalae Udhatugalin Vaasalai Kaattharulum Sodhanai Ennai Soozhumpothu Jeyitthida Kirupai Thaarum -thaevaa Umathu Pelan Thaarum