பாடல் #34334
கோடி கோடி நன்றி
🔤 Koti Koti Nanri
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடி கோடி நன்றி பாடுவேன் துதிகள் சொல்லி நான் பாடுவேன் எப்படி பாடுவேன் என்ன சொல்லிப் பாடுவேன் எனக்குள்ளே வாழும் என் இயேசுவை எண்ணில்லா நன்மைகள் எனக்காய் செய்திட்டார் என்றென்றும் நான் பாடுவேன் 1.நினைவுகள் அறிந்த நித்திய தேவன் நிம்மதி தந்தார் என் வாழ்வில் உணர்வுகள் புரிந்த உயிருள்ள தேவன் உதவிகள் செய்தார் உடனிருந்து நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும் -2 அதிகமாய் செய்த அதிசய தேவன் -2 2.கண்ணீரைக் கண்ட கருணையின் தேவன் களிகூர்ந்து மகிழ்ந்திட கிருபை செய்தார் கதறலை கேட்ட சர்வவல்ல தேவன் ஜெபத்தை கேட்டு பதில் தந்தார் தேவனை போல என் இயேசுவைப் போல -2 வானிலும் பூவிலும் யாருமேயில்லை -2 3.தகப்பனைப் போல தாங்கிய தேவன் தாயைப் போல தேற்றி வந்தார் தமையனைப் போல தலைவனைப் போல நல்வழி காட்டி நடத்தி வந்தார் நண்பனைப் போல வைத்தியன் போல -2 எல்லாமுமானார் என் இயேசு தேவன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Koti Koti Nanri Paatuvaen Thuthigal Solli Naan Paatuvaen Eppati Paatuvaen Enna Sollip Paatuvaen Enakkullae Vaazhum En Yesuvai Ennillaa Nanmaigal Enakkaay Seythittaar Enrenrum Naan Paatuvaen 1.ninaivugal Arindha Nitthiya Devan Nimmathi Thanthaar En Vaazhvil Unarvugal Purindha Uyirulla Devan Udhavigal Seythaar Udanirunthu Ninaippatharkum Naan Jepippatharkum -2 Athigamaay Seytha Athisaya Devan -2 2.kanneeraik Kanda Karunaiyin Devan Kalikoornthu Makizhnthida Kirupai Seythaar Katharalai Kaetta Sarvavalla Devan Jebatthai Kaettu Pathil Thanthaar Devanai Pola En Yesuvaip Pola -2 Vaanilum Poovilum Yaarumaeyillai -2 3.thakappanaip Pola Thaangkiya Devan Thaayaip Pola Thaerri Vanthaar Thamaiyanaip Pola Thalaivanaip Pola Nalvazhi Kaatti Natatthi Vanthaar Nanpanaip Pola Vaitthiyan Pola -2 Ellaamumaanaar En Yesu Devan -2