பாடல் #34328
கல்வாரியில் தொங்குகிறார்
🔤 Kalvaariyil Thongkukiraar
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியில் தொங்குகிறார் கர்த்தர் இயேசு தொங்குகிறார் கல்மனம் இன்னும் கரையலையோ கண்களில் கண்ணீர் வரவில்லையோ ஆ …ஆ … ஆ … ஆ … 1.கைகள் கால்களில் ஆணியுடன் கைவிடா நேசர் தொங்குகிறார் கவலை கஷ்டங்கள் நீக்கிடவே கண்ணீரை களிப்பாக மாற்றிடவே 2.தலையில் முள்முடி சூட்டப்பட்டு தந்தையை பிரிந்து தொங்குகிறார் தம் பிள்ளையாய் உன்னை ஏற்றுக்கொண்டு உன்னோடு உறவாடி மகிழ்ந்திடவே 3.ஈட்டியால் இதயம் கிழிக்கப்பட்டு ஈன சிலுவையில் தொங்குகிறார் இதயம் நொறுங்கி இன்றே நீ வா இயேசுவை தெய்வமாய் ஏற்றுக்கொள் வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyil Thongkukiraar Kartthar Yesu Thongkukiraar Kalmanam Innum Karaiyalaiyo Kankalil Kanneer Varavillaiyo Aa …aa … Aa … Aa … 1.kaigal Kaalkalil Aaniyudan Kaivitaa Naesar Thongkukiraar Kavalai Kashtanggal Neekkidavae Kanneerai Kalippaaga Maarridavae 2.thalaiyil Mulmuti Soottappattu Thanthaiyai Pirinthu Thongkukiraar Tham Pillaiyaay Unnai Aerrukkontu Unnotu Uravaati Makizhnthidavae 3.eettiyaal Idhayam Kizhikkappattu Eena Siluvaiyil Thongkukiraar Idhayam Norungki Inrae Nee Vaa Yesuvai Theyvamaay Aerrukkol Vaa