பாடல் #34317
கர்த்தர் உந்தன் நம்பிக்கை
🔤 Kartthar Undhan Nampikkai
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் உந்தன் நம்பிக்கையாய் இருந்து
உன் கால் சிக்கிகொள்ளாமல் காப்பார்
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்
1.உன் கால் இடறி விழ விட மாட்டார்
உன்னைக் காக்கும் தேவன் அவர் உறங்க மாட்டார்
இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதுமில்லை
அவர் தூங்குவதுமில்லை
உனது பக்கம் நிழலாக இருக்கின்றார்
2.கர்த்தர் உன்னை எப்பொழுதும் காக்கிறவர்
வெயிலும் , நிலவும் உன்னை சேதப்படுத்துவதில்லை
எல்லாத் தீங்குக்கும் விலக்கி உன்னை
காத்திடுவார் உன் ஆத்துமாவை காப்பார்
போக்கு வரவை இதுமுதற் கொண்டு காத்திடுவார்
3.அவர் தமது சிறகுகளால் உன்னை மூடுவார்
செட்டையின் கீழே அடைக்கலம் நீ புகுந்திடுவாய்
இரவின் பயம் பகலின் அம்பு எதற்கும்
பயமில்லை அவை அணுகுவதும் இல்லை
உன்னதமான கர்த்தரை உனக்கு தாபரமாய் கொண்டாய்
4.அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரே
நித்திய தந்தையே வல்லமை உள்ளவரே
( பாடிப் பாடி )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Undhan Nampikkaiyaay Irunthu
Un Kaal Sikkikollaamal Kaappaar
Avar Unnai Vaedanutaiya Kannikkum
Paazhaakkum Kollai Noykkum Thappuvippaar
1.un Kaal Idari Vizha Vida Maattaar
Unnaik Kaakkum Devan Avar Urangga Maattaar
Isravaelai Kaakkum Devan Urangkuvathumillai
Avar Thoongkuvathumillai
Unathu Pakkam Nizhalaaga Irukkinraar
2.kartthar Unnai Eppozhuthum Kaakkiravar
Veyilum , Nilavum Unnai Saedhappatutthuvathillai
Ellaath Theengkukkum Vilakki Unnai
Kaatthituvaar Un Aatthumaavai Kaappaar
Pokku Varavai Ithumudhar Kontu Kaatthituvaar
3.avar Thamathu Sirakugalaal Unnai Mootuvaar
Settaiyin Keezhae Ataikkalam Nee Pukunthituvaay
Iravin Payam Pakalin Ampu Edharkum
Payamillai Avai Anukuvathum Illai
Unnathamaana Karttharai Unakku Thaabaramaay Kontaay
4.athisayamaanavar Aalosanai Karttharae
Nitthiya Thanthaiyae Vallamai Ullavarae
( Paatip Paati )