பாடல் #34313
கருணையும் அருளும்
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
கருணையும் அருளும் என்னைத் தொடரும் வாழ்நாளெல்லாம் அது என்னைத் தொடரும் ஜீவனுள்ளோர் தேசத்திலே ஜீவனுள்ள நாட்களிலே ஜீவனுள்ள தேவனோடு நான் நடப்பேன் 1. கர்த்தரின் வீட்டினிலே - என்றும் உத்தமமாய் நடப்பேன் எப்போது என்னிடம் வருவீர் - என ஏங்கி தவிக்குது உள்ளம் 2.இருளின் பள்ளத்தாக்கிலே- நான் நடந்திட நேர்ந்தாலும் பொல்லாப்பை கண்டு பயப்படேன் தேவனே என்னோடே இருக்கிறீர் 3. கன்மலையே எந்தன் மீட்பரே - என் வாயின் வார்த்தைகளும் இதய தியானமெல்லாம் - உமக்கு பிரியமாய் இருப்பதாக