பாடல் #34307
ஏழைக்கு பெலனானவரே
🔤 Aezhaikku Pelanaanavarae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழைக்கு பெலனானவரே எளியவர்க்கு திடனானவரே நெருக்கப்படும் காலங்களில் தஞ்சமானவரே ஒடுக்கப்படும் நேரங்களில் புகலிடமானீரே 1.கேடுவரும் நாட்களில் கூடாரத்தின் உட்புறத்தில் ஒளித்து பாதுகாத்திரே கன்மலையில் நிறுத்தி வைத்து உயர்த்தினீரே காலமெல்லாம் நன்றி சொல்லி மகிழவைத்தீரே 2.பெருவெள்ளத்துக்கு தப்பிச் செல்லும் அடைக்கலமே புயல் காற்று வீசுகையில் புகலிடமே கன்மலையில் மறைத்து காக்கும் கேடகமே காலமெல்லாம் உம் புகழை பாடிடுவேனே 3.கொடுமையான சீறல்கள் மோதியடிக்கையில் சேதமொன்றும் அணுகாமல் பாதுகாத்தீரே பட்சத்தில் இருந்து என்னை தப்புவித்தீரே பரலோக கீதங்களால் சூழ்ந்து கொண்டீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhaikku Pelanaanavarae Eliyavarkku Thidanaanavarae Nerukkappatum Kaalanggalil Thanjjamaanavarae Otukkappatum Naeranggalil Pugalidamaaneerae 1.kaetuvarum Naatkalil Kootaaratthin Utpuratthil Olitthu Paathukaatthirae Kanmalaiyil Nirutthi Vaitthu Uyartthineerae Kaalamellaam Nanri Solli Makizhavaittheerae 2.peruvellatthukku Thappich Sellum Ataikkalamae Puyal Kaarru Veesukaiyil Pugalidamae Kanmalaiyil Maraitthu Kaakkum Kaedakamae Kaalamellaam Um Pugazhai Paatituvaenae 3.kotumaiyaana Seeralkal Mothiyatikkaiyil Saedhamonrum Anukaamal Paathukaattheerae Patsatthil Irunthu Ennai Thappuvittheerae Paraloga Keedhanggalaal Soozhnthu Konteerae