பாடல் #34302
எழுப்புதலின் புதிய ஆண்டு
🔤 Ezhuppudhalin Puthiya Aantu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுப்புதலின் புதிய ஆண்டு தொடங்கி விட்டது செழுமையான நாட்கள் இன்று மலர்ந்து விட்டது வெற்றி வேந்தன் முன்னே வீரர் நாமும் பின்னே கரம் பிடித்த கர்த்தரை நாம் தொடர்ந்து செல்லுவோம் 1.அதிசயங்கள் காணப்போகும் ஆண்டு இதுதான் சுக வாழ்வு துளிர்க்கப்போகும் வருஷம் இதுதான் துக்க காலம் முடிந்து போகும் நாளும் இதுதான் தூய தேவன் ஆசீர்தரும் நேரம் இதுதான் 2.தண்ணீரைக் கடக்கும் போது தேவன் இருப்பார் சோதனைகள் வரும் போது தப்புவிப்பார் கர்த்தர் வெளிச்சம் உன் மேலே உதித்து விட்டது காரிருளும் உன்னைக் கண்டு அஞ்சி ஓடுது 3.மக்கள் வெள்ளம் மந்தையைப் போல பெருக போகுது மன்னர் இயேசு நாமத்தையே புகழப் போகுது தேவதூதர் எக்காளம் காதில் கேக்குது தேவ ஜனம் கர்த்தரோடு செல்லப் போகுது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhuppudhalin Puthiya Aantu Thodangki Vittathu Sezhumaiyaana Naatkal Inru Malarnthu Vittathu Verri Vaendhan Munnae Veerar Naamum Pinnae Karam Pitittha Karttharai Naam Thodarnthu Selluvom 1.athisayanggal Kaanappokum Aantu Ithuthaan Suga Vaazhvu Thulirkkappokum Varusham Ithuthaan Thukka Kaalam Mutinthu Pokum Naalum Ithuthaan Thooya Devan Aaseertharum Naeram Ithuthaan 2.thanneeraik Katakkum Pothu Devan Iruppaar Sodhanaigal Varum Pothu Thappuvippaar Kartthar Veliccham Un Maelae Uthitthu Vittathu Kaarirulum Unnaik Kantu Anjsi Otuthu 3.makkal Vellam Manthaiyaip Pola Peruga Pokuthu Mannar Yesu Naamatthaiyae Pugazhap Pokuthu Thaevathoodhar Ekkaalam Kaathil Kaekkuthu Thaeva Janam Karttharotu Sellap Pokuthu