பாடல் #34295
எப்படியாகிலும் என் இயேசு
🔤 Eppatiyaakilum En Yesu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படியாகிலும் என் இயேசு எனக்கு உதவிகள் செய்திடுவார் நான் போகும் பாதை அறிவார் என் கண்ணீர்கள் துடைத்திடுவார் எனக்கு நிழலாய் வந்திடுவார் 1.சூழ்நிலைகள் மாறினாலும் , இயேசு மாறிடார் மனிதர்கள் மாறினாலும் , இயேசு மாறிடார் நண்பர்கள் மறந்தாலும் ,இயேசு மறந்திடார் நன்மை பெற்றோர் மறந்தாலும் .இயேசு மறந்திடார் 2.தேவையோ ஐயாயிரம்,இயேசு இருக்கிறார் இருப்பதோ ஐந்து அப்பம் , இயேசு இருக்கிறார் பெலவீன நேரமதில் இயேசு தாங்குவார் வியாதிகள் வேதனையில் , சுகமெனக்கருள்வார் 3.ஆபத்து காலத்திலே , இயேசு விடுவிப்பார் இக்கட்டு நேரத்திலே,இயேசு விடுவிப்பார் யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடார் துன்பம் தொல்லை வந்தாலும் , இயேசு கைவிடார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppatiyaakilum En Yesu Enakku Udhavigal Seythituvaar Naan Pokum Paathai Arivaar En Kanneerkal Thutaitthituvaar Enakku Nizhalaay Vanthituvaar 1.soozhnilaigal Maarinaalum , Yesu Maaritaar Manidharkal Maarinaalum , Yesu Maaritaar Nanparkal Maranthaalum ,yesu Maranthitaar Nanmai Perror Maranthaalum .yesu Maranthitaar 2.thaevaiyo Aiyaayiram,yesu Irukkiraar Iruppatho Ainthu Appam , Yesu Irukkiraar Pelaveena Naeramathil Yesu Thaangkuvaar Viyaathigal Vaedhanaiyil , Sugamenakkarulvaar 3.aabatthu Kaalatthilae , Yesu Vituvippaar Ikkattu Naeratthilae,yesu Vituvippaar Yaar Ennai Kaivittaalum Yesu Kaivitaar Thunbam Thollai Vanthaalum , Yesu Kaivitaar