பாடல் #34294
என்றென்றைக்கும்
🔤 Enrenraikkum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றென்றைக்கும் என்னோடு கூட இருப்பவரே
சத்திய ஆவியான தெய்வமே
உம்மை வாயார வாழ்த்துகிறேன்
மனதார போற்றுகிறேன் -(2)
(எங்கள்) பரிசுத்த ஆவியானவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
1.மிகவும் சிறந்த ஆலோசகராய் இருப்பவரே
யோசனையில் பெரியவராய் இருப்பவரே -(2)
செயல்களில் மகத்துவரே உதவி செய்பவரே -2
என் கரம் பிடித்து வழிநடத்தும் நண்பரே-2
-ஆராதனை
2.கண்ணீர் துடைத்து கவலை மாற்றும் தகப்பனே
ஆற்றி தேற்றி அரவணைக்கும் தெய்வமே-(2)
வழக்கை நடத்துகின்றீர் ஜெயத்தை தருகின்றீர்-2
வரப்போகும் காரியங்கள் தெரிவிக்கின்றீர்-2
-ஆராதனை
3.அபிஷேகத்தின் நதியாக என்னில் பாய்கின்றீர்
நீச்சல் ஆழம் என்னைக் கொண்டு செல்கின்றீர் -(2)
அன்பில் களிகூருவேன், வாழ்வில் செழித்திடுவேன் -2
உம் நதியில் நீந்தி நீந்தி மகிழ்த்திடுவேன் -2
-ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrenraikkum Ennotu Kooda Iruppavarae
Satthiya Aaviyaana Theyvamae
Ummai Vaayaara Vaazhtthukiraen
Manathaara Porrukiraen -(2)
(enggal) Parisuttha Aaviyaanavarae
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae -2
1.migavum Sirandha Aalosakaraay Iruppavarae
Yosanaiyil Periyavaraay Iruppavarae -(2)
Seyalkalil Makatthuvarae Udhavi Seypavarae -2
En Karam Pititthu Vazhinatatthum Nanparae-2
-aaraadhanai
2.kanneer Thutaitthu Kavalai Maarrum Thakappanae
Aarri Thaerri Aravanaikkum Theyvamae-(2)
Vazhakkai Natatthukinreer Jeyatthai Tharukinreer-2
Varappokum Kaariyanggal Therivikkinreer-2
-aaraadhanai
3.apishaegatthin Nathiyaaga Ennil Paaykinreer
Neecchal Aazham Ennaik Kontu Selkinreer -(2)
Anpil Kalikooruvaen, Vaazhvil Sezhitthituvaen -2
Um Nathiyil Neenthi Neenthi Makizhtthituvaen -2
-aaraadhanai