பாடல் #34265
எங்கள் ஆராதனை
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே
ஆராதனையில் மகிழ்பவரே
ஆராதிப்போம் உம்மையே 2-எங்கள்
இயேசுவே கிறிஸ்தேசுவே
உம் நாமம் வாழ்க
பரலோக ராஜனே
உம் அரசு வருக
1.ஆட்சியும் மாட்சியும் உமக்குதானே
ஆண்டவரே என்றும் உமக்குதானே
போற்றி புகழ்ந்து பாடித்துதித்து
உம்மையே உயர்த்திடுவோம் -இயேசுவே
2.வல்லமை மிக்க அரசர் நீரே
வழி நடத்தும் நல்ஆயன் நீரே
வாழ்த்தி வணங்கி பணிந்து குனிந்து
உம்மைத் தொழுதிடுவோம் இயேசுவே
3.நன்றியுடன் புகழ் பாடிடுவோம்
நாள்தோறும் நீதியைக் கொண்டாடுவோம்
நல்லவர் நீரே பெரியவர் நீரே
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்- இயேசுவே
4.எழும்பி பிரகாசி என் மகளே
உன் ஒளி இன்று வந்ததே
எந்தன் மகிமை இறங்கி வருகுதே
காரிருள் விலகி ஓடிப்போகுதே