பாடல் #34240
உண்மை தெய்வம்
🔤 Unmai Theyvam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மை தெய்வம் உன்னோடு இருக்க உள்ளம் சோராதே -நீ சோர்ந்து போகாதே 1.இன்று காணும் எகிப்தியனை நீ இனிமேல் காண்பதில்லை இனிய கானான் உனக்கு உண்டு இனிமேல் கலங்காதே நீ இனிதாய் வாழ்ந்திடுவாய் 2.நீ கடந்துவந்த பாடுகள் இன்று உன்னை விட்டு அகன்றிடும் மனம் மடிந்து போகாதே நீ மகிமையாய் அவை மாறுமே மனமும் புதிதாய் ஆகுமே 3.உந்தன் வாழ்வின் ஏமாற்றத்தாலே உள்ளம் சோர்ந்தாயோ நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும் அவர் அதிகமாய் செய்வாரே இயேசு அதிசயம் செய்வாரே 4.மெய்யான தேவன் நீரே நித்திய ஜீவன் நீரே அநாதி தேவன் நீரே -உம்மை 5.சர்வ வல்ல தேவன் நீரே சாவாமையுள்ளவரே சாத்தானை ஜெயித்தவரே உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmai Theyvam Unnotu Irukka Ullam Soraathae -nee Sornthu Pokaathae 1.inru Kaanum Ekipthiyanai Nee Inimael Kaanpathillai Iniya Kaanaan Unakku Untu Inimael Kalangkaathae Nee Inithaay Vaazhnthituvaay 2.nee Katanthuvandha Paatugal Inru Unnai Vittu Aganritum Manam Matinthu Pokaathae Nee Makimaiyaay Avai Maarumae Manamum Puthithaay Aakumae 3.undhan Vaazhvin Aemaartratthaalae Ullam Sornthaayo Ninaippatharkum Naan Jepippatharkum Avar Athigamaay Seyvaarae Yesu Athisayam Seyvaarae 4.meyyaana Devan Neerae Nitthiya Jeevan Neerae Anaathi Devan Neerae -ummai 5.sarva Valla Devan Neerae Saavaamaiyullavarae Saatthaanai Jeyitthavarae Ummai