பாடல் #34106
உபத்திரவம் இலேசானது
🔤 Ubatthiravam Ilaesaanathu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உபத்திரவம் இலேசானது - அதி சீக்கிரத்தில், நீங்கி போனது நுகத்தடிகள் மெதுவானது - என்றும் அவர் சுமைகள் இலகுவானது 1. அவர் கிருபை போதுமானது - மலை விலகினாலும் விலகாது வானம் பூமி உயரம் காட்டிலும் - இங்கு அவர் கிருபை பெரிதானது 2. தேவ அன்பு ஒழியாது - நம் பாவம் போக்கும் நதியானது அன்னை தந்தை அன்பை காட்டிலும் கல்வாரி அன்பு மேலானது 3. வேத வசனம் உயர்வானது - தெளி தேனிலும் அதி ருசியானது ஏழுமுறை மண் குகையில் உருக்கின - நல்ல வெள்ளியைப்போல் தூய்மையானது. 4. ஊக்கமான ஜெபமானது - நம் வாழ்வில் மிகுந்த புலனானது ஜெபிக்கும் மனிதர் வாழ்க்கையானது - என்றும் தோல்விகளை காணாதது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ubatthiravam Ilaesaanathu - Athi Seekkiratthil, Neengki Ponathu Nugatthatigal Methuvaanathu - Enrum Avar Sumaigal Ilakuvaanathu 1. Avar Kirupai Pothumaanathu - Malai Vilakinaalum Vilakaathu Vaanam Poomi Uyaram Kaattilum - Ingku Avar Kirupai Perithaanathu 2. Thaeva Anpu Ozhiyaathu - Nam Paavam Pokkum Nathiyaanathu Annai Thanthai Anpai Kaattilum Kalvaari Anpu Maelaanathu 3. Vaedha Vasanam Uyarvaanathu - Theli Thaenilum Athi Rusiyaanathu Aezhumurai Man Kukaiyil Urukkina - Nalla Velliyaippol Thooymaiyaanathu. 4. Ookkamaana Jebamaanathu - Nam Vaazhvil Mikundha Pulanaanathu Jepikkum Manidhar Vaazhkkaiyaanathu - Enrum Tholvigalai Kaanaadhathu.