பாடல் #34104
புரட்சி பூக்கள் பூக்க வேண்டும்
🔤 Puratsi Pookkal Pookka Vaentum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புரட்சி பூக்கள் பூக்க வேண்டும் புதிய சிந்தனை மலர வேண்டும் இறைவன் பெயரால் ஏய்க்கும் மனிதரை இனங்கண்டொதுக்கிட வேண்டும் - நீ 1. இடுக்கமான வழி விலக்கி அகன்ற பாதையின் மயக்கம் தந்து உறங்க வைக்கும் சிலுவை பகைஞர் உறவை விலக்க வேண்டும் - தினம் உபத்திரவங்கள் அதிக கன நித்ய மகிமை விரும்பிட வேண்டும் - தன் சிலுவை சுமந்திட வேண்டும் 2. மதுரமான இரசத்தை பருக திரண்டு கூடிடும் கூட்டம் சவுக்கை எடுக்கும் இயேசுவின் பின் தொடர மறுப்பதென்ன பாடு மரணம் எது வந்தாலும் பரம ன் வார்த்தைகள் போதும் - என தொடரும் சீடர்கள் வேண்டும் 3. மரித்த மனிதர் ஆவியாகி உலாவுவார் வந்து பேசுவார் - என பிதற்றும் மனிதனின் பாராட்டு வார்த்தைகள் விலக்கி நடந்திட வேண்டும் வாழும் வரைக்கும் வசனம் ஒலியில் வாழ்வு ஒளிர்ந்திட வேண்டும் - ஜீவ வசனம் பாதைக்கு தீபம் 4. வானம் சென்றவர் இயேசுவையன்றி ஒருவரிலையென வேதம் சொன்னது வானம் சென்று திரும்பி வந்தவர் மறந்து போனதென்ன அவர் வார்த்தை , ஆவி, ஜீவன் வேறு நமக்கெது வேண்டும் - திரு வார்த்தை நமக்கு போதும் 5. திருமறை கடல் ஆழம் மூழ்கி அழகு முத்துக்கள் எடுப்பதன்றி அரைத்த மாவை அறைக்கும் மனிதன் வார்த்தை மறந்திட வேண்டும் அடுத்த வாரம் இயேசு வருகிறார் - என கணக்கு சொல்லிடும் கூட்டம் - நீ ஒதுங்கி சென்றிட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puratsi Pookkal Pookka Vaentum Puthiya Sindhanai Malara Vaentum Iraivan Peyaraal Aeykkum Manidharai Inanggantothukkida Vaentum - Nee 1. Itukkamaana Vazhi Vilakki Agandra Paathaiyin Mayakkam Thanthu Urangga Vaikkum Siluvai Pakainjar Uravai Vilakka Vaentum - Thinam Ubatthiravanggal Athiga Kana Nithya Makimai Virumpida Vaentum - Than Siluvai Sumanthida Vaentum 2. Mathuramaana Irasatthai Paruga Thirantu Kootitum Koottam Savukkai Etukkum Yesuvin Pin Thodara Maruppathenna Paatu Maranam Ethu Vanthaalum Parama N Vaartthaigal Pothum - Ena Thodarum Seedarkal Vaentum 3. Marittha Manidhar Aaviyaaki Ulaavuvaar Vanthu Paesuvaar - Ena Pidharrum Manidhanin Paaraattu Vaartthaigal Vilakki Natanthida Vaentum Vaazhum Varaikkum Vasanam Oliyil Vaazhvu Olirnthida Vaentum - Jeeva Vasanam Paathaikku Theebam 4. Vaanam Sendravar Yesuvaiyanri Oruvarilaiyena Vaedham Sonnathu Vaanam Senru Thirumpi Vandhavar Maranthu Ponathenna Avar Vaartthai , Aavi, Jeevan Vaeru Namakkethu Vaentum - Thiru Vaartthai Namakku Pothum 5. Thirumarai Katal Aazham Moozhki Azhaku Mutthukkal Etuppathanri Araittha Maavai Araikkum Manidhan Vaartthai Maranthida Vaentum Atuttha Vaaram Yesu Varukiraar - Ena Kanakku Sollitum Koottam - Nee Othungki Senrida Vaentum