பாடல் #34103
எப்படியோ பாவம் வந்து
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
எப்படியோ பாவம் வந்து இனிக்க இனிக்க பழகி விடும் தப்பிதம் வழிகளில் ஓட தன்னலம் காட்டும் தான் பெலன் கூட்டும் - எப்படியோ 1. இயேசுவே தேவன் என்று சொன்னால் இல்லை அவர் ஒரு மனிதன் என்கும் மாசுகள் கூறி வேதம் புரட்டி மனதை குழப்பிவிடும் - நல்ல 2. இச்சை உலக இன்பங்கள் காட்டி எதிலும் மனதை சோர்வாக்கும் அச்சம் எதிலும் அதிகம் பெருக்கி அடிமையாக்கிவிடும் - உணர்வை அடிமையாக்கிவிடும் 3. மாயமான புன்னகை புரியும் மனதை கண்ணை குருடாக்கும் பாயும் தேவ அன்பை தடுத்து பாரம் சுமந்து விடும் - மனதில் பாரம் சுமந்து விடும் 4. இயேசு என்ற பேரை கேட்டால் எந்த பாவமும் எழுந்திடும் இன்னும் உன்னை அவரிடம் தந்தால் எங்கும் ஜெயம் கிடைக்கும் - உலகில் எங்கும் ஜெயம் கிடைக்கும்