பாடல் #34101
தோத்தரி தோத்தரி தோத்தரி
🔤 Thotthari Thotthari Thotthari
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்தரி தோத்தரி, தோத்தரி என்னுள்ளமே தோத்தரி திரியேகனை துங்கன் வசனி தானே துதித்து வாழும் என் மேலே. சிந்தையாய், சிந்தையாய், தேவ சேவடி தேடு ஜீவனே வழி கூடு ஆவலாய் பணிவோடு அனுதினமும் கொண்டாடு. பெத்தலேம், பெத்தலேம், பெத்தலேம் பதி அத்தனை இத்தனை கரிசித்தனை வித்தக மதி யத்தனை நிறுத்த கிருபை சிந்தனை ஆதியே, அனாதியே, ஆதி சத்திய வாய்மையே அதிசயன் உதித்தார் மெய்யே. அருமை ரட்சகர் செய்கையே. யாவரும் புகழும் தன்மையே. யேகோவா, யேகோவா தேவ சிகாமணி கவி தேவ தேவனை புகழ் கவி, தெரிந்து பாட உள்ளம் ஜெபி, தினமும் மகிழ்ந்து சுரம் குவி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotthari Thotthari, Thotthari Ennullamae Thotthari Thiriyaeganai Thunggan Vasani Thaanae Thuthitthu Vaazhum En Maelae. Sinthaiyaay, Sinthaiyaay, Thaeva Saevati Thaetu Jeevanae Vazhi Kootu Aavalaay Panivotu Anuthinamum Kontaatu. Petthalaem, Petthalaem, Petthalaem Pathi Atthanai Itthanai Karisitthanai Vitthaka Mathi Yatthanai Niruttha Kirupai Sindhanai Aathiyae, Anaathiyae, Aathi Satthiya Vaaymaiyae Athisayan Uthitthaar Meyyae. Arumai Ratsakar Seykaiyae. Yaavarum Pugazhum Thanmaiyae. Yaekovaa, Yaekovaa Thaeva Sikaamani Kavi Thaeva Devanai Pugazh Kavi, Therinthu Paada Ullam Jepi, Thinamum Makizhnthu Suram Kuvi