பாடல் #34099
மழை துளிகள் தாளமிட
🔤 Mazhai Thuligal Thaalamida
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மழை துளிகள் தாளமிட மாலை தென்றல் தாலாட்ட வான்வெளியின் வீதியிலே வலம் வருகின்ற வெள்ளி நிலவே நீ வருகின்ற வழியில் என் நேசரை கண்டாயோ - என் ஆசைகள் அவரிடம் சொல்லி விடவா என் அருகினில் வருவாயா 1. வானம் பூமி உண்டாக்கினார் ஆதி தேவன் வார்த்தையினால் - தாம் படைத்ததெல்லாம் நலமெனவே படைப்பின் தேவன் அறிந்தனரே பூமி ஒழுங்கின்மை ஆகிப்போனது என்ன வெறுமையாகிவிட்டது கோலமென்ன - அவர் படைக்கயிலப்படியே படைத்தனரோ - இல்லை படைத்தபின் பாழாகி போனதோ இந்த இரகசியம் எனக்கு விளங்களையே - இதை அறிந்து சொல்ல இங்கு வருவாயோ! - மழை 2. வானம் அவர் சிங்காசனம் பூமியவர் பாதபடி - அவர் பகலவனை படைக்கும் முன்னே - இங்கு வெளிச்சம் தந்தது இரகசியமே இரவை ஆள உன்னை இறைவன் படைத்திருக்க பகலில் தூங்கிவிட்ட மனிதனுக்காய் - நீ மலைமேல் ஏறி வருவாயோ - ஒரு மல்லிகை சரம் எடுத்து தருவாயோ - அன்று மலையில் மோசே உடைத்துவிட்ட- கல் பலகை துண்டுகள் கொண்டு வருவாயா! - மழை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mazhai Thuligal Thaalamida Maalai Thendral Thaalaatta Vaanveliyin Veethiyilae Valam Varukindra Velli Nilavae Nee Varukindra Vazhiyil En Naesarai Kantaayo - En Aasaigal Avaridam Solli Vidavaa En Arukinil Varuvaayaa 1. Vaanam Poomi Untaakkinaar Aathi Devan Vaartthaiyinaal - Thaam Pataitthathellaam Nalamenavae Pataippin Devan Arindhanarae Poomi Ozhungkinmai Aakipponathu Enna Verumaiyaakivittathu Kolamenna - Avar Pataikkayilappatiyae Pataitthanaro - Illai Pataitthapin Paazhaaki Ponatho Indha Irakasiyam Enakku Vilanggalaiyae - Ithai Arinthu Solla Ingku Varuvaayo! - Mazhai 2. Vaanam Avar Singkaasanam Poomiyavar Paadhapati - Avar Pakalavanai Pataikkum Munnae - Ingku Veliccham Thandhathu Irakasiyamae Iravai Aala Unnai Iraivan Pataitthirukka Pakalil Thoongkivitta Manidhanukkaay - Nee Malaimael Aeri Varuvaayo - Oru Mallikai Saram Etutthu Tharuvaayo - Anru Malaiyil Mosae Utaitthuvitta- Kal Palakai Thuntugal Kontu Varuvaayaa! - Mazhai