பாடல் #34096
என்னை பெத்த ராசாவே
🔤 Ennai Pettha Raasaavae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெத்த ராசாவே - என் கண்ணை போல உன்னை வளர்த்தேன் கண்ணுறங்கிப் போனதென்ன கல்வாரி சிலுவையில் - என்னை 1. கண்ணே நீ கண் திறந்தாய் காரிருள் கலைந்ததையா அன்பே நீ அவதரித்தாய் அந்தகாரம் அகன்ற தையா பெண்ணே நீ பிறந்ததால் பாவமெல்லாம் பறந்ததையா அன்னை எந்தன் தாலாட்டு உன் செவியில் கேட்கலையா ஆராரிரோ...ஆராரிரோ... - என்னை 2. மன்னா நீ உதித்ததால் மண்பதை உயர்ந்ததையா ஐயனே பாடு பட்டாய் பேய் பிணியும் விலகுதையா சிலுவை சுமந்ததினால் சீலமெல்லாம் பெருகுதையா சேயுந்தன் செவியிலே என் குரல் கேட்கலையா ஆராரிரோ..ஆராரிரோ... - என்னை 3. கல்லாகிப்போன மனம் கனியாய் கனிந்திடவே அன்னை எந்தன் மடியினிலே உன் மேனி சாய்ந்ததென்ன மெய்யான போஜனம் மெய்ப்பொருளே என் மகனே தாயெந்தன் தாலாட்டு சேனைக்கு கேட்கலையா ஆராரிரோ...ஆராரிரோ - என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pettha Raasaavae - En Kannai Pola Unnai Valartthaen Kannurangkip Ponathenna Kalvaari Siluvaiyil - Ennai 1. Kannae Nee Kan Thiranthaay Kaarirul Kalaindhathaiyaa Anpae Nee Avatharitthaay Andhakaaram Agandra Thaiyaa Pennae Nee Pirandhathaal Paavamellaam Parandhathaiyaa Annai Endhan Thaalaattu Un Seviyil Kaetkalaiyaa Aaraariro...aaraariro... - Ennai 2. Mannaa Nee Uthitthathaal Manpathai Uyarndhathaiyaa Aiyanae Paatu Pattaay Paey Piniyum Vilakuthaiyaa Siluvai Sumandhathinaal Seelamellaam Perukuthaiyaa Saeyundhan Seviyilae En Kural Kaetkalaiyaa Aaraariro..aaraariro... - Ennai 3. Kallaakippona Manam Kaniyaay Kaninthidavae Annai Endhan Matiyinilae Un Maeni Saayndhathenna Meyyaana Pojanam Meypporulae En Makanae Thaayendhan Thaalaattu Saenaikku Kaetkalaiyaa Aaraariro...aaraariro - Ennai