பாடல் #34071
தேவாதி தேவன்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. தேவாதி தேவன் பாலகனாய் தேவசாயல் முற்றும் துறந்தவர் ஆகுடில்தனை தாமே தெரிந்தவராய் ஆதரை மீதினில் தோன்றினாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு பாலனுக்கு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு ராஜனுக்கே 2. மானிடர் பாவத்தை சுமந்தவராய் பாவமாம் சாயல் தரித்தனரே மானிடர் சாபத்தை தீர்த்திடவே மானிடனாய்ப் பூவில் வந்தனரே -அல்லேலூயா 3. கந்தை பொதிந்தவர் முன்னணையில் விந்தையாம் பாலனாய் தூங்கினார் எம்மையும் மகிமையில் நிறுத்திடவே விந்தையாய் வாழ்வைத் தாம் மேற்கொண்டார் - அல்லேலூயா 4. நரிகளுக்குமோர் குழியுண்டே பறவைகளுக்கோர் கூடுமுண்டே தரணியில் சாய்ப்பிடமற்றவராய் இரட்சகர் இயேசு வே அலைந்தனர் ' ' -அல்லேலூயா 5. தாவீதின் வேரிவர் அற்புதரே மாறாத மகிமைக்கும் பாத்திரரே தீராயெம் வாஞ்சைகள் தீர்த்திடவே வாரார் தன் மகிமையில் எமக்காக -அல்லேலூயா