பாடல் #34067
என் நேசர் தேடி வந்தார்
🔤 En Naesar Thaeti Vanthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண் டார் ஏழை என்னோடு கூடவே இருந்தாரே! 1 சேனையின் கர்த்தர் பராக்கிரமசாலி யவர் “சும்மாயிரு உனக்காய் யுத்தம் செய்வேன்” என்றார் எனக்காய் யுத்தம் செய்து ஜெயமதை வாங்கித் தந்தார் வாழ்நாளெல்லாம் அவரைப் போற்றி பாடுவேன்-என் நேசர் 2. மனித சாயமெல்லாம் விருதாவாய் போய்விடும் தாயுள்ளம் கொண்ட அன்பர் ஆற்றிய அணைத்திட்டாரே அன்பின் அடிகளாலும் ஆறுதல் மொழிகளாலும் இன்னும் அவர் கிட்டி சேர உதவினார் - என் நேசர் 3. மரணத்தின் கன்னி என்னைச் சுற்றி சூழ்ந்திடும் போதும் மரணத்தின் பெலன் அளித்து புதிய ஜீவன் ஈந்தார் அக்கினி சோதனைகள் அலையென மோதிடினும் விசுவாச பாதையில் வெந்திடா காத்தீரன்றோ - என் நேசர் 4. கர்த்தரை என் முன்பாக நிறுத்தி நோக்குவதினால் அசைக்கப்படுவதில்லை மனுஷன் எனக்கென் செய்வான் வானத்தைக் கிழித்திறங்கி சத்துருவை முறியடித்த இராஜாதி ராஜன் ஜெயமே எந்தன் ஜெயமே! - என் நேசர் 5. பிதாவே உம் இஷ்டம் மாத்திரம் என்னில் நிறைவேறட்டும்” என்றுரைத்த இயேசுவைப்போல் என்னை முற்றும் ஒப்புவித்தேன் என்னிலே நற்கிரியை ஆரம்பித்ததும் என் இயேசு முடிவு வரை நடத்தி மகிமையில் ஏற்றுக் கொள்வேன் - என் நேசர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesar Thaeti Vanthaar Endhanathu Kanneer Kan Taar Aezhai Ennotu Koodavae Irunthaarae! 1 Saenaiyin Kartthar Paraakkiramasaali Yavar “summaayiru Unakkaay Yuttham Seyvaen” Enraar Enakkaay Yuttham Seythu Jeyamathai Vaangkith Thanthaar Vaazhnaalellaam Avaraip Porri Paatuvaen-en Naesar 2. Manidha Saayamellaam Viruthaavaay Poyvitum Thaayullam Konda Anbar Aarriya Anaitthittaarae Anpin Atigalaalum Aarudhal Mozhigalaalum Innum Avar Kitti Saera Udhavinaar - En Naesar 3. Maranatthin Kanni Ennaich Surri Soozhnthitum Pothum Maranatthin Pelan Alitthu Puthiya Jeevan Eenthaar Akkini Sodhanaigal Alaiyena Mothitinum Visuvaasa Paathaiyil Venthitaa Kaattheeranro - En Naesar 4. Karttharai En Munpaaga Nirutthi Nokkuvathinaal Asaikkappatuvathillai Manushan Enakken Seyvaan Vaanatthaik Kizhitthirangki Satthuruvai Muriyatittha Iraajaathi Raajan Jeyamae Endhan Jeyamae! - En Naesar 5. Pithaavae Um Ishtam Maatthiram Ennil Niraivaerattum” Enruraittha Yesuvaippol Ennai Murrum Oppuvitthaen Ennilae Narkiriyai Aarampitthathum En Yesu Mutivu Varai Natatthi Makimaiyil Aerruk Kolvaen - En Naesar