பாடல் #34065
துதியில் வாசம் செய்திடும்
🔤 Thuthiyil Vaasam Seythitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. துதியில் வாசம் செய்திடும் தூயவனே துதியும் மகத்துவமும் உமக்கென்றும் எண்ணமில்லா உம் சர்வ நன்மைகளை எண்ணியெண்ணியே நன்றியால் பாடுவேன் இயேசுவே நீரே என் சொந்தம் நித்ய கிருபையால் நித்தம் உன் பாதையில் நித்யம் வரை நடத்திடும் 2 "வாரும் அக்கரை போவேன்” என்றுரைத்த உம் வாக்கை நம்பி வந்து எந்தன், அலை போல் ஆழ்ந்த வந்த சோதனையில் மலையாதென்னைத் திடமாய்க் காத்தீர - இயேசுவே 3 "என்னையன்றி ஒன்றும் செய்யலாகா" தென்று என்னையும் உம்மோடு சேர்த்தீரன்றோ உம்மில் நிலைத்து உந்தன் வார்த்தையால் நற்கனியாய் விளங்க தயை செய்வீர் - இயேசுவே 4 “தேவனே உம் சித்தம் செய்ய வாரே” னென்று தேகம் தரைவழி மார்க்கம் தந்தீர் ஆவியோடாத்மா தேகம் ஒப்புவித்தேன். உம் சித்தபடி பரிசுத்தம் தாரும் - இயேசுவே 5 "உன்னை என்னிடமாய்ச் சேர்த்துக்கொள்வே” னென்ற உன் திரு வார்த்தையால் ஏங்குகிறேன் சீயோனின் கல்லுகள் மேல் வாஞ்சை வைத்த சீர்மிகு சுத்தரையும் சேர்க்க வரும் - இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thuthiyil Vaasam Seythitum Thooyavanae Thuthiyum Makatthuvamum Umakkenrum Ennamillaa Um Sarva Nanmaigalai Enniyenniyae Nanriyaal Paatuvaen Yesuvae Neerae En Sondham Nithya Kirupaiyaal Nittham Un Paathaiyil Nithyam Varai Natatthitum 2 "vaarum Akkarai Povaen” Enruraittha Um Vaakkai Nampi Vanthu Endhan, Alai Pol Aazhndha Vandha Sodhanaiyil Malaiyaathennaith Thidamaayk Kaattheera - Yesuvae 3 "ennaiyanri Onrum Seyyalaakaa" Thenru Ennaiyum Ummotu Saerttheeranro Ummil Nilaitthu Undhan Vaartthaiyaal Narkaniyaay Vilangga Thayai Seyveer - Yesuvae 4 “devanae Um Sittham Seyya Vaarae” Nenru Thaegam Tharaivazhi Maarkkam Thantheer Aaviyotaathmaa Thaegam Oppuvitthaen. Um Sitthapati Parisuttham Thaarum - Yesuvae 5 "unnai Ennidamaaych Saertthukkolvae” Nendra Un Thiru Vaartthaiyaal Aengkukiraen Seeyonin Kallugal Mael Vaanjsai Vaittha Seermiku Suttharaiyum Saerkka Varum - Yesuvae