பாடல் #34063
இயேசுவே உம் பாரெங்கும்
🔤 Yesuvae Um Paarengkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் பாரெங்கும் அதிசயம் இயேசுவே உம் வழிகள் மாந்தர்க்கு ஆச்சரியம் இயேசுவின் இன்சத்தம் எந்தன் இனிமை இயேசுவின் சமூகம் நித்திய பேரின்பம் 1. உன் ஜீவன் பலியாகி என் ஆத்துமாவை மீட்டீர் உம் தழும்புகளால் குணமாக்கினீரே எல்லா பயத்தினின்றும் விடுவித்தீரே இயேசுவே உம் நாமத்தை என்றும் துதிப்பேன் - இயேசுவே 2. தேவரீர் இதுவரை என்னக் கொண்டு வந்தீர் தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தேன் செழிப்பான ஸ்தலத்தில் கொண்டுவந்ததால் செழிப்புள்ள நற்பலனை உமக்கென்றும் கொடுப்பேன் - இயேசுவே 3. கேட்கும் காது காணும் கண்ணும் உண்டாக்கினீர் கேருபீன்கள் நடுவில் வசிப்பவர் உந்தன் இன்ப சத்தம் என்றும் கேட்டு நான் அன்பரின் இன்முகம் நித்தம் தரிசிப்பேன் - இயேசுவே 4. உலக ராஜ்யம் ஒன்றொடொன்று தீங்கு செய்யாதே பரலோக ராஜ்யத்தின் சுதந்தரனானேன் கிறிஸ்துவின் நல்ல போர்ச் சேவகனாய் என்றும் கிறிஸ்துவின் நிமித்தம் தீங்கனுபவிப்பேன் - இயேசுவே 5. பரிசுத்தவான்களின் இராஜாய் வெளிப்படுவீர் பிழை கரை திரை ஏதும் அற்றவராக பரிசுத்தம் மகிமை நிறைந்த சபையாகி பரனேசுவோடென்றும் ஜீவனில் ஆள்வோம் - இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Paarengkum Athisayam Yesuvae Um Vazhigal Maandharkku Aacchariyam Yesuvin Insattham Endhan Inimai Yesuvin Samoogam Nitthiya Paerinbam 1. Un Jeevan Paliyaaki En Aatthumaavai Meetteer Um Thazhumpugalaal Kunamaakkineerae Ellaa Payatthininrum Vituvittheerae Yesuvae Um Naamatthai Enrum Thuthippaen - Yesuvae 2. Thaevareer Ithuvarai Ennak Kontu Vantheer Theeyaiyum Thanneeraiyum Katanthu Vanthaen Sezhippaana Sthalatthil Kontuvandhathaal Sezhippulla Narpalanai Umakkenrum Kotuppaen - Yesuvae 3. Kaetkum Kaathu Kaanum Kannum Untaakkineer Kaerupeenkal Natuvil Vasippavar Undhan Inba Sattham Enrum Kaettu Naan Anbarin Inmugam Nittham Tharisippaen - Yesuvae 4. Ulaka Raajyam Onrotonru Theengku Seyyaathae Paraloga Raajyatthin Sudhandharanaanaen Kiristhuvin Nalla Porch Saevakanaay Enrum Kiristhuvin Nimittham Theengganubavippaen - Yesuvae 5. Parisutthavaankalin Iraajaay Velippatuveer Pizhai Karai Thirai Aethum Artravaraaga Parisuttham Makimai Niraindha Sapaiyaaki Paranaesuvotenrum Jeevanil Aalvom - Yesuvae