பாடல் #34062
என்றென்றும் வந்தடையும்
🔤 Enrenrum Vandhataiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என்றென்றும் வந்தடையும் கன்மலையும் இயேசுவே எந்தன் தாகம் தீர்க்கும் கன்மலையும் இயேசுவே ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை நாடி உலகெல்லாம் அலைந்தலைந்து தேடியும் நான் காண்கிறேன் கர்த்தரின் நாமமே பலமான துருகமே நான் அங்கே ஓடியோ சுகமாக தாங்குவேன் கர்த்தரின் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்தால் நிறைவான ஆறுதல் பலனும் அடைவேனே 2. கர்த்தரின் காருண்யம் அது எத்தனை பெரியதே கர்த்தரின் செளந்தரியம் அது எத்தனை பெரியதே என் கண்கள் இராஜாவை மகிமையோடு காணும் தூரத்தில் உள்ள தேசம் சீயோனை காணும் 3. உம்மிலே பலனடையும் மாந்தர் பாக்கியவான்களே உந்தனின் வீட்டில் வாசம் செய்வார் பாக்கியவான்களே அழுகையின் பள்ளத்தாக்கை நீரூற்றாக்கிக் கொள்ளுவார் பெலத்தின் மேல் பெலனடைந்து சீயோன் வந்து சேருவார் 4. பகலில் வெயிலில் எனக்கு நிழலானீரே இரவின் இருளிலே என் வெளிச்சமாய் உதித்தாரே தாழ்விலும் துயரத்திலும் என்னையும் நினைத்தீரே உயர்விலும் உம்மை விட்டு பிரிந்திடாமல் காத்தீரே 5. உந்தன் மறைவிடம் என் இளைப்பாறும் ஸ்தலம் அன்றோ உந்தன் மறைவிடம் நான் உருவாகும் ஸ்தலம் அன்றோ மணவாளனே நான் உந்தன் சாயலாக மாறுவேன் மறுரூபமாகியே உம்மோடு வந்து சேருவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Enrenrum Vandhataiyum Kanmalaiyum Yesuvae Endhan Thaagam Theerkkum Kanmalaiyum Yesuvae Olimayamaana Ethirkaalam Onrai Naati Ulakellaam Alaindhalainthu Thaetiyum Naan Kaankiraen Karttharin Naamamae Palamaana Thurugamae Naan Angkae Otiyo Sugamaaga Thaangkuvaen Karttharin Settaiyin Keezh Ataikkalam Vanthaal Niraivaana Aarudhal Palanum Ataivaenae 2. Karttharin Kaarunyam Athu Etthanai Periyathae Karttharin Selandhariyam Athu Etthanai Periyathae En Kankal Iraajaavai Makimaiyotu Kaanum Thooratthil Ulla Thaesam Seeyonai Kaanum 3. Ummilae Palanataiyum Maandhar Paakkiyavaankalae Undhanin Veettil Vaasam Seyvaar Paakkiyavaankalae Azhukaiyin Pallatthaakkai Neeroorraakkik Kolluvaar Pelatthin Mael Pelanatainthu Seeyon Vanthu Saeruvaar 4. Pakalil Veyilil Enakku Nizhalaaneerae Iravin Irulilae En Velicchamaay Uthitthaarae Thaazhvilum Thuyaratthilum Ennaiyum Ninaittheerae Uyarvilum Ummai Vittu Pirinthitaamal Kaattheerae 5. Undhan Maraividam En Ilaippaarum Sthalam Anro Undhan Maraividam Naan Uruvaakum Sthalam Anro Manavaalanae Naan Undhan Saayalaaga Maaruvaen Maruroobamaakiyae Ummotu Vanthu Saeruvaena