பாடல் #3406
பூமியின் குடிகளே
🔤 Poomiyin Kutigalae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசு சாமியினன்னாமமதிலே மகிழுவீர். ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மை உருக்கமாய்த் - தங்கருணைப் பெருக்கமாய் - மீட்டரணாந் துருக்கமாய் - இதுவரைக்கும் நெருக்கமாய் - ஊக்கமாய்நின்றார். - பூமி 1.தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத் தந்துமா நிர்ப்பந்தமற விந்தையாகவே, இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச் சிந்தையில் நினைந்து முழு நன்றியாகவே, சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ? தாசரே - யேசுநாதர் நேசரே, - எருசலேம் வாசரே, - கர்த்தருக்குள்ளாம் ராசரே, - ஆசாரிமாரே! - பூமி 2.கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்ற சத்தியத்தை எத்தினமும் உற்றுணருவீர்; அத்தனார் படைப்புகளைப் புத்தியற்றுத் தெய்வமெனச் சொற்றவரே விக்கிரகப் பத்தியகல்வீர்; இத்தரையில் நாங்களல்ல உத்தபரன் எங்களைக் கண் ணோக்கினார், - எங்கள்பவம் போக்கினார், - சகலதுன்பம் நீக்கினார், - தமதுமந்தை ஆக்கினார், - தூக்கினாரென்று. - பூமி 3.ஜீவபரன் வாசல்களில் மேவி எய்துவோம், துதியோ டாவியுடனே நமது நாவுமிசைந்து தேவ பிரகாரங்களிலே வருவோமே, புகழ்ச்சி மாவுரிமை யோடுரைத்துக் கூவி மகிழ்ந்து பாவலர் மற்றோரேநல்ல நாவலரே கர்த்தர்வீட்டுக் கோடுவோம், - அவர்நாமத்தில் கூடுவோம், - அவர்பதத்தை நாடுவோம், - அவர்மகிமை தேடுவோம், - பாடுவோம் துதி. - பூமி 4.வல்ல பரனானவர் மா நல்லவர் அவர் கிருபை உள்ள தூழி ஊழிகாலம், தொல்லையுண்டுமோ? சொல்லரும் அவரதுண்மை யுள்ளதே தலைமுறைகள் எல்லாவற்றிலு மெங்களுக் கல்லலண்டுமோ? புல்லனாம் பேயினரசே யில்லையெனுமட்டும் காளம் பிடிக்கிறோம், - சத்தியத்தைப் படிக்கிறோம், - பேயரங்கம் இடிக்கிறோம், - அவனையெங்கும் அடிக்கிறோம், - சீக்கிரம் ஜெயம். - பூமி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomiyin Kutigalae, Neer Thaamathamilaathiyaesu Saamiyinannaamamathilae Makizhuveer. Omanaathi Yandhaparanae Manudaraana Nammai Urukkamaayth - Thanggarunaip Perukkamaay - Meettaranaan Thurukkamaay - Ithuvaraikkum Nerukkamaay - Ookkamaayninraar. - Poomi 1.thanthaiyaar Thamathunaesa Maindhanaip Paadhakarkkaagath Thanthumaa Nirppandhamara Vinthaiyaagavae, Indha Neesamaana Poologandhanai Meetta Naesatthaich Sinthaiyil Ninainthu Muzhu Nanriyaagavae, Sandhathamumae Thuthippa Thandhamaana Vaelaiyallo? Thaasarae - Yaesunaadhar Naesarae, - Erusalaem Vaasarae, - Karttharukkullaam Raasarae, - Aasaarimaarae! - Poomi 2.kartthanaar Oruvarae Nam Nitthiya Paramanendra Satthiyatthai Etthinamum Urrunaruveer; Atthanaar Pataippugalaip Putthiyarruth Theyvamenach Sortravarae Vikkirakap Patthiyakalveer; Ittharaiyil Naanggalalla Utthaparan Enggalaik Kan Nokkinaar, - Enggalpavam Pokkinaar, - Sakalathunbam Neekkinaar, - Thamathumanthai Aakkinaar, - Thookkinaarenru. - Poomi 3.jeevaparan Vaasalkalil Maevi Eythuvom, Thuthiyo Taaviyudanae Namathu Naavumisainthu Thaeva Pirakaaranggalilae Varuvomae, Pugazhchsi Maavurimai Yoturaitthuk Koovi Makizhnthu Paavalar Marroraenalla Naavalarae Karttharveettuk Kotuvom, - Avarnaamatthil Kootuvom, - Avarpathatthai Naatuvom, - Avarmakimai Thaetuvom, - Paatuvom Thuthi. - Poomi 4.valla Paranaanavar Maa Nallavar Avar Kirupai Ulla Thoozhi Oozhikaalam, Thollaiyuntumo? Sollarum Avarathunmai Yullathae Thalaimuraigal Ellaavarrilu Menggaluk Kallalantumo? Pullanaam Paeyinarasae Yillaiyenumattum Kaalam Pitikkirom, - Satthiyatthaip Patikkirom, - Paeyaranggam Itikkirom, - Avanaiyengkum Atikkirom, - Seekkiram Jeyam. - Poomi