பாடல் #34059
சாரோனின் ரோஜாவே
🔤 Saaronin Rojaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உம் அன்பு எத்தனை யோ ஆச்சரியம் உம்மை மாத்திரம் நான் நேசித்திடுவேன் - அன்பே உம்மையே நான் சேவித்திடுவோம் 1. தீமையை நன்மையாக மாற்றி தந்தீரே தீங்கொன்றும் அணுகாது அரணானீரே கண்ணில் விழா கண்ணின் மணிபோல் கண்ணை என்மேல் பதித்துக் காத்தீரே - சாரோனின் 2. நிந்தைகள் பழிகளும் சூழ்ந்திட்ட வேளை நித்தமும் நெருக்கத்தால் தவித்த வேளை "பயப்படாதே” என்று நீர் தேற்றியே பாசம் கொண்டு அணைத்தீரல்லவோ- சாரோனின் 3. கர்ச்சிக்கும் சிங்கம் போல் சாத்தான் வந்தாலும் யூதா கோத்திர சிங்கம் என்னில் உள்ளதால் போர்முனை நின்று போராடுவேன் நான் ஜெயம் பெற்ற உம்மை உயர்த்துவேன்- சாரோனின் 4. காண்டாமிருகத்தின் போல் பெலன் ஈயும் அதனைப் போல எந்தன் கொம்புயர்த்துவீர் புது எண்ணெயால் அபிஷேகியும் சத்துருக்கள் வெட்கம் அடைந்திட - சாரோனின் 5. நேசர் நீர் வரும் வேளை நெருங்கிடுதே உம் பாதம் முத்தம் செய்து காத்திருப்பேன் பரிசுத்தரே உம்மை போல் மாற்றி சேர்த்துக்கொள்ளும் உம்மோடு என்னையே- சாரோனின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Rojaavae Pallatthaakkin Leeliyae Um Anpu Etthanai Yo Aacchariyam Ummai Maatthiram Naan Naesitthituvaen - Anpae Ummaiyae Naan Saevitthituvom 1. Theemaiyai Nanmaiyaaga Maarri Thantheerae Theengkonrum Anukaathu Aranaaneerae Kannil Vizhaa Kannin Manipol Kannai Enmael Pathitthuk Kaattheerae - Saaronin 2. Ninthaigal Pazhigalum Soozhnthitta Vaelai Nitthamum Nerukkatthaal Thavittha Vaelai "payappataathae” Enru Neer Thaerriyae Paasam Kontu Anaittheerallavo- Saaronin 3. Karchsikkum Singgam Pol Saatthaan Vanthaalum Yoothaa Kotthira Singgam Ennil Ullathaal Pormunai Ninru Poraatuvaen Naan Jeyam Pertra Ummai Uyartthuvaen- Saaronin 4. Kaantaamirugatthin Pol Pelan Eeyum Adhanaip Pola Endhan Kompuyartthuveer Puthu Enneyaal Apishaekiyum Satthurukkal Vetkam Atainthida - Saaronin 5. Naesar Neer Varum Vaelai Nerungkituthae Um Paadham Muttham Seythu Kaatthiruppaen Parisuttharae Ummai Pol Maarri Saertthukkollum Ummotu Ennaiyae- Saaronin