பாடல் #34056
அல்பா ஒமெகாவும் நீர்
🔤 Alpaa Omekaavum Neer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்பா ஒமெகாவும் நீர் ஆதி அந்தமும் நீர் அரும் பெரும் ஜோதியும் நீர் சர்வ வல்லவர் நீர் சர்வ ஞானியும் நீர் சந்தமாய் உம்மைத் துதிப்பேன் 1. உம்மை நம்பினோர் கெதிராக வந்ததாம் வல்லமைகள் அழித்தே அதிசயமானவர் செயல் தனில் வல்லவராய் அதிசய கிருபையுமாய் ஜெயத்துடன் நடத்தினீரே - அல்பா 2. உலகம் மாம்சம் மாயையின் இன்பமும் சபைதனில் தோன்றிடுதே பரிசுத்தமாகுதலை பயத்துடன் காத்துக்கொண்டு ஆவியினால் நடக்க அன்பரே கிருபை செய்வீர் - அல்பா 3. “பலத்தால் பராக்கிரமத்தினாலும் அல்ல - என் ஆவியால் ஆகு" மென்றீர் நிறைவான தேவனே நீர் குறைவதை அகற்றிடும் உந்தன் சாயலதை உருவாகிடும் என்னில் - அல்பா 4. நெருக்கத்தின் நாளில் உம் கிருபை புகழ் தஞ்சம் என் அடைக்கலம் நீர் அதி சீக்கிரம் நீங்கிவிடும் லேசான உபத்திரவம் அளித்திடும் அதிகமான நித்திய கன மகிமையை - அல்பா 5. எமக்காய் விசேஷித்த நன்மையானதொன்றை முன் நியமித்தீரன்றோ மகிமையாய் இலங்கும் சீயோன் புது சாலோம் நகரமதில் மகிபனைத் இயேசுவுடன் ஆளுவோம் என்றென்றுமாய் - அல்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alpaa Omekaavum Neer Aathi Andhamum Neer Arum Perum Jothiyum Neer Sarva Vallavar Neer Sarva Njaaniyum Neer Sandhamaay Ummaith Thuthippaen 1. Ummai Nampinor Kethiraaga Vandhathaam Vallamaigal Azhitthae Athisayamaanavar Seyal Thanil Vallavaraay Athisaya Kirupaiyumaay Jeyatthudan Natatthineerae - Alpaa 2. Ulakam Maamsam Maayaiyin Inbamum Sapaidhanil Thonrituthae Parisutthamaakudhalai Payatthudan Kaatthukkontu Aaviyinaal Natakka Anbarae Kirupai Seyveer - Alpaa 3. “palatthaal Paraakkiramatthinaalum Alla - En Aaviyaal Aaku" Menreer Niraivaana Devanae Neer Kuraivathai Agarritum Undhan Saayalathai Uruvaakitum Ennil - Alpaa 4. Nerukkatthin Naalil Um Kirupai Pugazh Thanjjam En Ataikkalam Neer Athi Seekkiram Neengkivitum Laesaana Ubatthiravam Alitthitum Athigamaana Nitthiya Kana Makimaiyai - Alpaa 5. Emakkaay Visaeshittha Nanmaiyaanathonrai Mun Niyamittheeranro Makimaiyaay Ilangkum Seeyon Puthu Saalom Nakaramathil Makibanaith Yesuvudan Aaluvom Enrenrumaay - Alpaa