பாடல் #34055
மேகமீதில் இயேசு ராஜனே
🔤 Maegameethil Yesu Raajanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மேகமீதில் இயேசு ராஜனே தோன்றிடுவான் மாசில்லா பரிசுத்தரை சேர்த்திட வந்திடுவார் கறை திரையற்ற நல் மணவாட்டியாய் இணைந்திடுவோம் மணவாளனோடே விண்ணதின் சாயலைத் தரிப்போம் கண்ணிமைப் பொழுதினிலே முகமுகமாகவே கண்டவரை யுகயுகமாய் சேவிப்போம் 2. இராக்காலமும் சென்று பகலும் சமீபமாகுதே உணர்ந்தெழும்பிடுவோம் தீங்கு நாட்களும் நெருங்கிடுதே இருளின் கிரியைகளை அகற்றி நாம் ஒளியின் ஆயுதங்கள் தரித்திடுவோம - விண்ணதின் 3. விசுவாசமும் இதோ புவிதனில் குறைந்திடுதே தேவ பக்தியும் அன்பும் மாந்தரில் தணிந்திடுதே மா பரிசுத்த விசுவாசத்தில் தேவ அன்பு என்றும் நிலைத்திருப்போம் - விண்ணத் 4. பின்மாரியின் மழையினால் புது பெலன் அடைவேன் ஒளி வீசுவோம் சுடர்கள் இருண்ட இவ்வுலகினில் ஆவியின் வரங்களால் நிரைந்தவராய் ஆத்ம நேசருக்காய் காத்திருப்போம் - விண்ணதின் 5. சீயோன் சாலேமின் வேலையை விரைவாக முடித்து சீயோன் இராஐனவர் தம் மகிமையில் வெளிப்படுவார் சிந்தையில் சுத்தராய் ஜீவித்தோராய் சந்திக்க ஆயத்தமபகிடுவோம்- விண்ணதின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maegameethil Yesu Raajanae Thonrituvaan Maasillaa Parisuttharai Saertthida Vanthituvaar Karai Thiraiyartra Nal Manavaattiyaay Inainthituvom Manavaalanotae Vinnathin Saayalaith Tharippom Kannimaip Pozhuthinilae Mugamugamaagavae Kandavarai Yugayugamaay Saevippom 2. Iraakkaalamum Senru Pakalum Sameebamaakuthae Unarnthezhumpituvom Theengku Naatkalum Nerungkituthae Irulin Kiriyaigalai Agarri Naam Oliyin Aayudhanggal Tharitthituvoma - Vinnathin 3. Visuvaasamum Itho Puvidhanil Kurainthituthae Thaeva Pakthiyum Anpum Maandharil Thaninthituthae Maa Parisuttha Visuvaasatthil Thaeva Anpu Enrum Nilaitthiruppom - Vinnath 4. Pinmaariyin Mazhaiyinaal Puthu Pelan Ataivaen Oli Veesuvom Sudarkal Irunda Ivvulakinil Aaviyin Varanggalaal Niraindhavaraay Aathma Naesarukkaay Kaatthiruppom - Vinnathin 5. Seeyon Saalaemin Vaelaiyai Viraivaaga Mutitthu Seeyon Iraaainavar Tham Makimaiyil Velippatuvaar Sinthaiyil Suttharaay Jeevitthoraay Santhikka Aayatthamapakituvom- Vinnathin