பாடல் #34049
சீயோனின் ஆளுகின்ற
🔤 Seeyonin Aalukindra
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சீயோனின் ஆளுகின்ற கர்த்தர் பெரியவர் சேவித்து அவர் முகம் சித்தர் காணுவார் ஜீவிக்க இயேசுவைப் போலவே சாந்தமாக ஜீவ தண்ணீர் ஊற்றினால் பெருகி மகிழ்வோம் சீயோன் பர்வதம் மகாராஜாவின் நகரம் சர்வ பூமியின் மகிழ்ச்சி நம் சொந்தமே சீரிலங்கி கிருபையால் இயேசுவோடென்றென்றும் சீயோன் சிகரமதில் ஆட்சி செய்வோம் 2. கற்புள்ள மாசற்றோராய் முற்றும் ஜெயங்கொண்டு சொற்படி ஆட்டுக்குட்டியின் பின்னே செல்பவர் உற்றதோர் மெல்கிசேதேக்கின் முறைமையில் பொற்பரன் எழில்மிகு சீயோனில் இருப்போம் - சீயோன் 3, தந்தையாய்த் தோள் மீது நித்தம் சுமந்திடும் மந்தை மேல் கவனம் வைத்து மேய்க்கும் தூயவர் சிந்தையில் கிறிஸ்துவைப்போல் ஜீவனையே ஊற்றி நிந்தைகளைச் சகித்தே மகிழ்ந்து செல்லுவோம்- சீயோன் 4. சீயோனை கட்டி தமது மகிமையில் சீக்கிரம் வெளிப்படுவார் சீயோன் ராஜனே உத்தம ஸ்தானமும் கீர்த்தியும் அடைந்தோர் தத்தமாகப் பெற்ற நற்சேவையைத் தொடர்வோம் - சீயோன் 5. பூரண சற்குணராம் தூயப் பிதாவைப்போல் பூரண பரிசுத்தராய் அன்பில் திகழ்ந்து பழத்தின் மேல் பலன் அடைந்து சீயோனிலே நாம் பூரணமாய் தேவ சித்தம் செய்து சேருவோம் - சீயோன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Seeyonin Aalukindra Kartthar Periyavar Saevitthu Avar Mugam Sitthar Kaanuvaar Jeevikka Yesuvaip Polavae Saandhamaaga Jeeva Thanneer Oorrinaal Peruki Makizhvom Seeyon Parvatham Makaaraajaavin Nakaram Sarva Poomiyin Makizhchsi Nam Sondhamae Seerilangki Kirupaiyaal Yesuvotenrenrum Seeyon Sigaramathil Aatsi Seyvom 2. Karpulla Maasarroraay Murrum Jeyangkontu Sorpati Aattukkuttiyin Pinnae Selpavar Urtrathor Melkisaethaekkin Muraimaiyil Porparan Ezhilmiku Seeyonil Iruppom - Seeyon 3, Thanthaiyaayth Thol Meethu Nittham Sumanthitum Manthai Mael Kavanam Vaitthu Maeykkum Thooyavar Sinthaiyil Kiristhuvaippol Jeevanaiyae Oorri Ninthaigalaich Sakitthae Makizhnthu Selluvom- Seeyon 4. Seeyonai Katti Thamathu Makimaiyil Seekkiram Velippatuvaar Seeyon Raajanae Utthama Sthaanamum Keertthiyum Atainthor Thatthamaagap Pertra Narsaevaiyaith Thodarvom - Seeyon 5. Poorana Sarkunaraam Thooyap Pithaavaippol Poorana Parisuttharaay Anpil Thigazhnthu Pazhatthin Mael Palan Atainthu Seeyonilae Naam Pooranamaay Thaeva Sittham Seythu Saeruvom - Seeyon