பாடல் #34047
என் இயேசுவே என் ஜீவன் நீரல்லோ
🔤 En Yesuvae En Jeevan Neerallo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே - என் ஜீவன் நீரல்லோ என் இயேசுவே - என் பெலன் நீரல்லோ சீயோனின் பாதையில் வெளிச்சம் நீரல்லோ நேசரே உம் முகம் கண்டு என்றும் களிப்பேன் 1. மரண இருளின் பள்ளத்தாக்கிலே மாண்டிடா என்னையும் தூக்கினீர் தயவாய் ஜீவனின் பெலத்தால் நிறைத்தீரே இயேசுவே நிதம் உன் முகம் கண்டு ஜீவிப்பேன் தேவா - என் 2. நீசன் என் குறைகள் யாவையும் மன்னித்து நேசரே உம் அன்பை ஆவியால் அளித்தீர் நித்திய ஜீவ வசனத்தின் பெலனை நிதம் எனிக்கீந்தீர் சத்திய தேவா - என் 3. பாதையில் கால்கள் சறுக்கும் வேளை தாங்கினீர் உம் கிருபையின் கரத்தால் வியாதியால் தேகம் வாடி போயினும் ஆவியால் உயிர்ப்பித்தீர் என்னகம் தேவா - என் 4. காரிருள் போல் சோதனை வரும் கர்த்தா உம் கிருபை சூழ்ந்ததே என்னையும் கால்களின் தீபமாய்ப் பாதையின் ஒளியாய் மாறா உன் வாக்குகள் நிதமும் தோன்றிடுதே - என் மாற்றிடும் தயவாய் என்னிலே நேசா நீங்கிடா சூரியனின் ஜீவனின் ஜோதியில் சீயோனில் பிரகாசிப்பேன் யுகாயுகமாகவே - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae - En Jeevan Neerallo En Yesuvae - En Pelan Neerallo Seeyonin Paathaiyil Veliccham Neerallo Naesarae Um Mugam Kantu Enrum Kalippaen 1. Marana Irulin Pallatthaakkilae Maantitaa Ennaiyum Thookkineer Thayavaay Jeevanin Pelatthaal Niraittheerae Yesuvae Nidham Un Mugam Kantu Jeevippaen Thaevaa - En 2. Neesan En Kuraigal Yaavaiyum Mannitthu Naesarae Um Anpai Aaviyaal Alittheer Nitthiya Jeeva Vasanatthin Pelanai Nidham Enikkeentheer Satthiya Thaevaa - En 3. Paathaiyil Kaalkal Sarukkum Vaelai Thaangkineer Um Kirupaiyin Karatthaal Viyaathiyaal Thaegam Vaati Poyinum Aaviyaal Uyirppittheer Ennakam Thaevaa - En 4. Kaarirul Pol Sodhanai Varum Kartthaa Um Kirupai Soozhndhathae Ennaiyum Kaalkalin Theebamaayp Paathaiyin Oliyaay Maaraa Un Vaakkugal Nidhamum Thonrituthae - En Maarritum Thayavaay Ennilae Naesaa Neengkitaa Sooriyanin Jeevanin Jothiyil Seeyonil Pirakaasippaen Yukaayugamaagavae - En