பாடல் #34044
பாடுபட்டோரையே சேர்த்திட
🔤 Paatubattoraiyae Saertthida
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாடுபட்டோரையே சேர்த்திட வருவார் பறந்து நம் நேசரை சந்தித்திடவே பாரினில் இயேசுவின் பாதங்கள் சென்ற பாதைகள் தெரிந்து பின் தொடர்ந்திடுவோம் இக்காலப் பாடுகள் எளிதல்ல - அது. இனிவரும் மகிமைக்கு ஒப்பாகுமோ எக்காலமும் அவர் நாம் ஆண்டிட ஏகுவோம் பெலன்பெற்று சிலுவையண்டை 2. கண்ணீரின் பாதையில் கலங்கிடும் தருணம் கண்ணை நம் மேல் வைத்து நடத்தினார் கண்மணி போலவே காத்திடும் - ஞான கன்மலை கிறிஸ்துவே சேர்ந்திடுவோம் - இக்கால 3. நிந்தை அவமானம் எந்த மனுஷனால் நிறைந்து வந்தாலும் வருந்திடாது கிறிஸ்துவின் நிமித்தம் பாக்கியமென்றெண்ணி கிருபையில் மறைந்து நாம் மகிழ்ற்திடுவோம் - இக்கால 4. சோதனை தொடர்ந்திட பெருகிடும் நோய்களால் வேதனை அனைத்தையும் சகித்திடவே மேன்மையாய் உயிர்த்தெழு வாதிக்கப்பட்டுமே மகிமையின் ரூபமதை அடைந்திடுவோம் - இக்கால 5. தேவனின் சித்தம் செய்திட நிறைவாய் ஜீவனை ஊற்றியே சேவித்திடவே சீர் மணவாளியாய் இயேசுவோடென்றும் சீயோனும் சாலேமுமாய் ஜொலித்திடுவோம் - இக்கால
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paatubattoraiyae Saertthida Varuvaar Paranthu Nam Naesarai Santhitthidavae Paarinil Yesuvin Paadhanggal Sendra Paathaigal Therinthu Pin Thodarnthituvom Ikkaalap Paatugal Elidhalla - Athu. Inivarum Makimaikku Oppaakumo Ekkaalamum Avar Naam Aantida Aekuvom Pelanperru Siluvaiyantai 2. Kanneerin Paathaiyil Kalangkitum Tharunam Kannai Nam Mael Vaitthu Natatthinaar Kanmani Polavae Kaatthitum - Njaana Kanmalai Kiristhuvae Saernthituvom - Ikkaala 3. Ninthai Avamaanam Endha Manushanaal Nirainthu Vanthaalum Varunthitaathu Kiristhuvin Nimittham Paakkiyamenrenni Kirupaiyil Marainthu Naam Makizhrthituvom - Ikkaala 4. Sodhanai Thodarnthida Perukitum Noykalaal Vaedhanai Anaitthaiyum Sakitthidavae Maenmaiyaay Uyirtthezhu Vaathikkappattumae Makimaiyin Roobamathai Atainthituvom - Ikkaala 5. Devanin Sittham Seythida Niraivaay Jeevanai Oorriyae Saevitthidavae Seer Manavaaliyaay Yesuvotenrum Seeyonum Saalaemumaay Jolitthituvom - Ikkaala