பாடல் #34038
இயேசுவே நீர் பெரியவரே
🔤 Yesuvae Neer Periyavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீர் பெரியவரே! பாரினில் உமக்கொப்பாய் தேவனுண்டோ? பரத்தினில் உம்மையல்லால் வேறுயாருமில்லை இடத்தில் நீர் என் தஞ்சம் இயேசு நாதா! 1. வறண்ட பாலையை வளமாக மாற்றி புரண்டதாம் அலையை அமர்த்தினீரே! காய்ந்ததாம் கோலாம் எனை நீர் எடுத்து கரமதில் ஆயுதமாக்கினீரே - இயேசு 2. அநாதி சிநேகத்தால் சிநேகித்தேன் என்றீர் அன்பென்னும் கயிற்றால் கட்டி நீரே! காருண்ய கரத்தால் இழுத்துக் கொண்டீர்! கருணையின் கடலாம் கர்த்தரே நீர் - இயேசு 3. உனக்கு எதிராக உருவாகும் ஆயுதம் வாய்க்காதே போம் என்று உரைத்தீரன்றோ? கர்த்தாவே நீர் என் மேல் பிரியம் இருப்பதால் சத்துரு என்னை ஜெயிப்பதில்லை - இயேசு 4. என் கருவை உந்தன் கண்களால் கண்டீரோ என்னிலே திருநோக்கம் நிறைவேற்றிடும் மன்னவா! உந்தன் சாயலை அடைந்திட மண்ணில் ஏழையின் ஏங்குகின்றேன் - இயேசு 5. மணாளன் இயேசுவே! தோன்றுவார் வேகத்தில் மணவறையதினில் மறைந்திடுவாள் உந்தன் மார்பில் சார்ந்தும் மகிழ்ந்து உம்முடன் வாழுவேன் என்றென்றுமாய் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neer Periyavarae! Paarinil Umakkoppaay Devanunto? Paratthinil Ummaiyallaal Vaeruyaarumillai Idatthil Neer En Thanjjam Yesu Naathaa! 1. Varanda Paalaiyai Valamaaga Maarri Purandathaam Alaiyai Amartthineerae! Kaayndhathaam Kolaam Enai Neer Etutthu Karamathil Aayudhamaakkineerae - Yesu 2. Anaathi Sinaegatthaal Sinaekitthaen Enreer Anpennum Kayirraal Katti Neerae! Kaarunya Karatthaal Izhutthuk Konteer! Karunaiyin Katalaam Karttharae Neer - Yesu 3. Unakku Ethiraaga Uruvaakum Aayudham Vaaykkaathae Pom Enru Uraittheeranro? Kartthaavae Neer En Mael Piriyam Iruppathaal Satthuru Ennai Jeyippathillai - Yesu 4. En Karuvai Undhan Kankalaal Kanteero Ennilae Thirunokkam Niraivaerritum Mannavaa! Undhan Saayalai Atainthida Mannil Aezhaiyin Aengkukinraen - Yesu 5. Manaalan Yesuvae! Thonruvaar Vaegatthil Manavaraiyathinil Marainthituvaal Undhan Maarpil Saarnthum Makizhnthu Ummudan Vaazhuvaen Enrenrumaay - Yesu