பாடல் #34033
கிருபை பொருந்திட
🔤 Kirupai Porunthida
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிருபை பொருந்திட அருளென்னில் பொழிந்து கிருபை மேல் கிருபை அடையச் செய்வீர் கிறிஸ்துவே உந்தன் சாயலாய் மாற கிருபை நிறைவாய் ஊற்றிடுமே நான் இருப்பது உந்தன் மாறாத கிருபை நிர்மூலமாகாததும் கிருபையே அற்புதமே நீர் நடத்திடும் பாதை அளித்திடுமே புதுக் கிருபைகளை 2. கலங்கி பயத்தினால் அமிழ்ந்திட்ட பொழுது, கரம் நீட்டி பிடித்து அரவணைத்தீர் கருத்துடன் உறங்காமலே காத்த கிருபாசனமே உம்மைத் துதிப்பேன் - நான் 3. சிலுவை சுமந்து என் பாவ சாபம் போக்கிட சிறுமையும் அடைந்து மரித்தவர் தேவரீர் உந்தன் கிருபையே போதும் தழும்புகளால் குணம் அடைந்து - நான் 4. அடர்ந்து சாதனைகள் வேதனைகள் பெருக தொடர்ந்திடும் சத்துரு வெள்ளம்போலவே பறந்திடும் ஜெயக்கொடி ஆவியாலே மறைந்து கிருபையில் ஜீவிப்பேனே - நான் 5. மகிமை சந்நிதியில் சுத்தமாக நிறுத்த மிகுந்த கிருபையும் உடையவரே மருரூபமாக மாறியே வானில் - மகிழ்ந்து உம்முகம் தரிசிப்பேனே - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kirupai Porunthida Arulennil Pozhinthu Kirupai Mael Kirupai Ataiyach Seyveer Kiristhuvae Undhan Saayalaay Maara Kirupai Niraivaay Oorritumae Naan Iruppathu Undhan Maaraadha Kirupai Nirmoolamaakaadhathum Kirupaiyae Arpudhamae Neer Natatthitum Paathai Alitthitumae Puthuk Kirupaigalai 2. Kalangki Payatthinaal Amizhnthitta Pozhuthu, Karam Neetti Pititthu Aravanaittheer Karutthudan Urangkaamalae Kaattha Kirupaasanamae Ummaith Thuthippaen - Naan 3. Siluvai Sumanthu En Paava Saabam Pokkida Sirumaiyum Atainthu Maritthavar Thaevareer Undhan Kirupaiyae Pothum Thazhumpugalaal Kunam Atainthu - Naan 4. Adarnthu Saadhanaigal Vaedhanaigal Peruga Thodarnthitum Satthuru Vellampolavae Paranthitum Jeyakkoti Aaviyaalae Marainthu Kirupaiyil Jeevippaenae - Naan 5. Makimai Sannithiyil Sutthamaaga Niruttha Mikundha Kirupaiyum Utaiyavarae Maruroobamaaga Maariyae Vaanil - Makizhnthu Ummugam Tharisippaenae - Naan