பாடல் #34032
ஆயிரம் நாவுகள் போதுமோ
🔤 Aayiram Naavugal Pothumo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆயிரம் நாவுகள் போதுமோ புவியில் ஆத்தும நேசர் போற்றிட உம்மையே முடிவேயில்லை உம் ஆண்டுகள் போலவே இணையில்லா கிருபை நிலைத்திடுமென்னிலே "கைவிடேன் உன்னை நான்" என்றுரைத்தவர் கைத்தலம் வரைந்தீரன்றோ அசைந்திடு சீயோன் பர்வதம் போலவே இசைந்தும்மில் நிலைத்திருப்பேன் 2. பாருருவாகுமுன் பார்த்தீரே பரனே பாரினில் நீரல்லால் வேறாருமில்லையே பரிசுத்த அழைப்பால் அழைத்தீரே என்னையும் பரிசுத்தருடன் நற்சுதந்திரம் பெறவே - கைவிடேன் 3. பகர்ந்தீரென் உள்ளத்தில் உன்னத பெலனை தகர்த்துவிட தீயோரின் வல்லமை யாவுமே அகந்தனில் பொழிந்தீர் அளவில்லாத அன்பினை அகந்தனில் தொடர் உம் திருவடிகள் - கைவிடேன் 4. நிந்தையாம் ஆழியும் அமிழ்த்திய வேளை சோதனையாம் தீயில் வெந்தழிந்துப் போகா பாய்ந்துந்தன் சிறகின் மீதினில் தாங்கியே பட்சமாய் என்னை உம் மந்தையில் கர்த்தரே - கைவிடேன் 5. சீர்மிகு சித்திரை சேர்த்திட வானிலே சீயோனே பணித் சீக்கிரம் வருவார் சீர்பொருந்து உந்தன் சந்நிதி நின்றிட ஸ்ரீ இயேசு ராஜனே தயை கூறுமென்னிலே - கைவிடேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aayiram Naavugal Pothumo Puviyil Aatthuma Naesar Porrida Ummaiyae Mutivaeyillai Um Aantugal Polavae Inaiyillaa Kirupai Nilaitthitumennilae "kaivitaen Unnai Naan" Enruraitthavar Kaitthalam Varaintheeranro Asainthitu Seeyon Parvatham Polavae Isainthummil Nilaitthiruppaen 2. Paaruruvaakumun Paarttheerae Paranae Paarinil Neerallaal Vaeraarumillaiyae Parisuttha Azhaippaal Azhaittheerae Ennaiyum Parisuttharudan Narsudhanthiram Peravae - Kaivitaen 3. Pakarntheeren Ullatthil Unnatha Pelanai Thakartthuvida Theeyorin Vallamai Yaavumae Agandhanil Pozhintheer Alavillaadha Anpinai Agandhanil Thodar Um Thiruvatigal - Kaivitaen 4. Ninthaiyaam Aazhiyum Amizhtthiya Vaelai Sodhanaiyaam Theeyil Vendhazhinthup Pokaa Paaynthundhan Sirakin Meethinil Thaangkiyae Patsamaay Ennai Um Manthaiyil Karttharae - Kaivitaen 5. Seermiku Sitthirai Saertthida Vaanilae Seeyonae Panith Seekkiram Varuvaar Seerporunthu Undhan Sannithi Ninrida Sree Yesu Raajanae Thayai Koorumennilae - Kaivitaen