பாடல் #34028
உம் சித்தம் செய்ய நான்
🔤 Um Sittham Seyya Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உம் சித்தம் செய்ய நான் வருகின்றேன் உலகில்" என்ற என் நேசரை போல் உவந்தே என்னையும் அர்ப்பணித்தேன் உன்னதரின் சித்தம் செய்திடுவேன் இயேசுவே உம் திரு சித்தமே என்னில் முற்றுமாய் நிறைவேற்றும் ஒப்புவித்தேன் உம் கரத்தில் ஏற்றென்னை நடதடதிடும் 2. தம் திரு சிந்தையில் வரைந்த தாம் தற்பரன் திரு சித்தமதை ஆயத்தம் செய்த என் தேகமதில் ஆதரையில் யானும் செய்திடுவேன் - இயேசு 3. ஆவியை ஈந்தவர் ஆலயமாய் ஆக்கியதாம் எந்தன் காயமதில் பரிசுத்தமானதை பூரணமாய் . பயத்துடன் நிறைவேற்றிடுவோம் - இயேசு 4. பாரினில் பாவம் விட்டோய்ந்தவனாய் பாடுகளின் சிந்தை தரித்தோனாய் முன்னோடியாய் சென்ற இயேசுவின் நல் திருவடிகளை பின் தொடர்வேன் - இயேசு 5. ஜீவனாம் கிறிஸ்து வரும் நாளில் ஜீவன் வைத்தே சித்தம் செய்தோரின் ஜீவன் ஆளுகை செய்திடவே ஜீவபலியாய் படைக்கின்றேன் யான் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Um Sittham Seyya Naan Varukinraen Ulakil" Endra En Naesarai Pol Uvanthae Ennaiyum Arppanitthaen Unnatharin Sittham Seythituvaen Yesuvae Um Thiru Sitthamae Ennil Murrumaay Niraivaerrum Oppuvitthaen Um Karatthil Aerrennai Natathatathitum 2. Tham Thiru Sinthaiyil Varaindha Thaam Tharparan Thiru Sitthamathai Aayattham Seytha En Thaegamathil Aadharaiyil Yaanum Seythituvaen - Yesu 3. Aaviyai Eendhavar Aalayamaay Aakkiyathaam Endhan Kaayamathil Parisutthamaanathai Pooranamaay . Payatthudan Niraivaerrituvom - Yesu 4. Paarinil Paavam Vittoyndhavanaay Paatugalin Sinthai Tharitthonaay Munnotiyaay Sendra Yesuvin Nal Thiruvatigalai Pin Thodarvaen - Yesu 5. Jeevanaam Kiristhu Varum Naalil Jeevan Vaitthae Sittham Seythorin Jeevan Aalukai Seythidavae Jeevapaliyaay Pataikkinraen Yaan - Yesu