பாடல் #34
அடைக்கலம் அடைக்கலமே
🔤 Ataikkalam Ataikkalamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன் அடைக்கலம் அடைக்கலமே! திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு --- அடைக்கலம் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே, அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே; மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் 2. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும் நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்; பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம் 3. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன் என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம் 4. கட்டுப்படாக் காயமதின் கெட்டரணம் போலவே மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்; கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே, கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! - அடை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalam Ataikkalamae , Yesu Naathaa, Un Ataikkalam Ataikkalamae! Thidanarrup Pelanarrun Atiyurtrazhum Aezhaikku --- Ataikkalam 1. Aasaiyotu Paavamathil Alainthu Thirinthaenae, Anpulla Pithaa Unai Vittakanru Pirinthaenae; Mosamathai Yaeyalaal Marronraiyum Kaanaamalae Thoshamotu Saerndhanan Thuratthitaathu Saerttharul! —ataikkalam 2. Sinthiya Uthiramathum Ainthu Thirukkaayamum Nonthuru Kenathumanach Sanjjalamakarritum; Pandhamikum Paavi Endran Kenjsitung Karatthinai Endhavidhamun Thallaamal Irangkitu Maiyanae! — Ataikkalam 3. Ennidatthil Varuvorai Endhavidhamum Thallaen Enru Sonna Vaakkathanil Enakkum Pangkillaiyo Anrunathu Pakkamathil Aakiyirundha Kallanukku Inrubara Theesiliruppaa Yenruraitthaa Yallavo? — Ataikkalam 4. Kattuppataak Kaayamathin Kettaranam Polavae Mattuppataap Paavamathil Mayangki Urangkinaen; Kettavanae Povenak Kilatthinum Niyaayamae, Kittivandhalarum Aezhai Kenjsudhal Kaelayyanae! - Atai