பாடல் #3399
புறப்படு நீ புறப்படு
🔤 Purappatu Nee Purappatu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புறப்படு! நீ புறப்படு! கட்டளை பிறந்துவிட்டது கண்டிப்பில்லை கெஞ்சவில்லை துணிந்த நெஞ்சம் உனக்கிருந்தால் புறப்படு! தூரத்தில் கேட்பது அழுகுரல் புறப்படு! பாவத்தில் நொந்தவர் புலம்புகிறார் புறப்படு! தவறாமல் இயேசுவை அறிவிக்கப் புறப்படு! திரளாகச் செவிகொடுப்பார் மக்கள் இனி புறப்படு! இயேசு நாமம் ஓங்கிடவே தீவிரமாய் புறப்படு! சுயம் உன்னில் தினம்சாக தெளிவோடு புறப்படு! வெற்றியே முடிவாகும் வீரனே புறப்படு! விலை மிஞ்சும் சன்மானம் உனக்குண்டு புறப்படு! கலப்பையிலே கைவைத்து முன்னேறு, புறப்படு! பின் திரும்பும் தோல்வி மனம் வேண்டாமே புறப்படு! போரிலே வெற்றி கண்ட வீரர் உண்டு புறப்படு! இயேசுவையே முன்நிறுத்தி முன்னேறு புறப்படு! கலங்கரை விளக்காக வழிகாட்ட புறப்படு! கரைந்துவிடும் மெழுகுபோல மாறிட புறப்படு! கணக்கற்றோர் ஜீவகரை சேர்ந்திடவே புறப்படு! இயேசுவின் புகழெங்கும் பரவட்டும் புறப்படு!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Purappatu! Nee Purappatu! Kattalai Piranthuvittathu Kantippillai Kenjjavillai Thunindha Nenjjam Unakkirunthaal Purappatu! Thooratthil Kaetpathu Azhukural Purappatu! Paavatthil Nondhavar Pulampukiraar Purappatu! Thavaraamal Yesuvai Arivikkap Purappatu! Thiralaagach Sevikotuppaar Makkal Ini Purappatu! Yesu Naamam Ongkidavae Theeviramaay Purappatu! Suyam Unnil Thinamsaaga Thelivotu Purappatu! Verriyae Mutivaakum Veeranae Purappatu! Vilai Minjsum Sanmaanam Unakkuntu Purappatu! Kalappaiyilae Kaivaitthu Munnaeru, Purappatu! Pin Thirumpum Tholvi Manam Vaentaamae Purappatu! Porilae Verri Kanda Veerar Untu Purappatu! Yesuvaiyae Munnirutthi Munnaeru Purappatu! Kalanggarai Vilakkaaga Vazhikaatta Purappatu! Karainthuvitum Mezhukupola Maarida Purappatu! Kanakkarror Jeevakarai Saernthidavae Purappatu! Yesuvin Pugazhengkum Paravattum Purappatu!