பாடல் #3397
புத்தியாய் நடந்து
🔤 Putthiyaay Natanthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தியாய் நடந்து வாருங்கள்; - திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள். சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு, நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி 1.ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? - திரு உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்; சீருடைய தெய்வப் பிள்ளைகள் - நீங்கள்; ஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள்? கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே - புத்தி 2.ஆவியை அடக்காதிருங்கள்; - மறை சொல்லுவதை அசட்டை செய்யாமல் பாருங்கள்; ஜீவனை அடையத் தேடுங்கள்; - யேசு கிறிஸ்தின் சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்; மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம் வேண்டுதலோடு தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் - புத்தி 3.ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் - துதித்துப் போற்றி, இன்பமாய்ச் சத்திய வேதத்தை வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் - பிடித்துளத்தில் வைத்துக்கொண்டு இவ்வுலகத்தை நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம் ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் - புத்தி 4.பரிசுத்த கூட்டம் அல்லவோ? - நீங்கள் எல்லாரும் பரன் மகன் தேட்டம் அல்லவோ? தரிசிக்க நாட்டம் அல்லவோ? - கிறிஸ்தின் உள்ளம் தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ? பரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக் கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் - புத்தி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Putthiyaay Natanthu Vaarunggal; - Thiruvasanap Poottaith Thiranthu Paarunggal. Satthiyatthaip Parrikkontu, Thannaich Sutthi Pannikkontu, Nitthamum Jebam, Tharumam, Neethi Seythu, Paatikkontu - Putthi 1.aarutaiya Pillaigal Neenggal? - Thiru Uraiyil Arinthu Unarnthu Paarunggal; Seerutaiya Theyvap Pillaigal - Neenggal; Aethindha Thittharippu Seyyum Vakaigal? Koorudan Meyth Thirumarai Kuritthuch Solvathaith Thinam Naerudan Aaraaynthu Paartthu Nitthiya Oliyil Thaanae - Putthi 2.aaviyai Adakkaathirunggal; - Marai Solluvathai Asattai Seyyaamal Paarunggal; Jeevanai Ataiyath Thaetunggal; - Yaesu Kiristhin Sinthaiyaith Tharitthuk Kollunggal; Maeviyae Jebam, Manraattu, Vinnappam Vaentudhalotu Thaavi, Yaesuvaip Pititthuth Thalaraa Nataiyotunnip - Putthi 3.aesuk Kiristhaiyan Pathatthaith - Thuthitthup Porri, Inbamaaych Satthiya Vaedhatthai Vaasitthu Aaraaynthu, Nalatthaip - Pititthulatthil Vaitthukkontu Ivvulakatthai Naesiyaamal Pakaitthunggal Nitthiya Ratsippaith Thinam Aasaiyotu Thaeti, Neenggal Ataiyumbati Murrilum - Putthi 4.parisuttha Koottam Allavo? - Neenggal Ellaarum Paran Makan Thaettam Allavo? Tharisikka Naattam Allavo? - Kiristhin Ullam Thannilae Kontaattam Allavo? Parisanai Seythavarporpaadhatthai Manathil Unnik Karisanai Yotu Thaetik Kaanath Theeyon Naanap Patip - Putthi