பாடல் #339
இயேசுவின் நேசத்தால் என்
🔤 Yesuvin Naesatthaal En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நேசத்தால் என் உள்ளம் பொங்குதே அவ்வன்பின் மாட்சிமை அறிவிக்கெட்டுமோ ஆ என்ன ஆழமே இயேசுவின் நேசமே அதன் தியானமே ஜீவிய பாக்கியமே 1.லோக முண்டாகுமுன் என்னையும் கண்டாரே லோகத்தில் வந்து தன் ஜீவனை தந்தாரே உன்னத அழைப்பால் தன்னோடு தங்கிட என்னை தகுதியாய் எண்ணிய நேசமே 2.சீயோனில் எனக்காய் மூலைக்கல்லாகியே சீயோனில் என்னையும் சேர்த்தொன்றாய் கட்டியே மேலோக நாதரின் வேலையை முடித்த மேலான சிற்பியாம் இயேசுவின் நேசமே 3.உன்னத அன்பென்னும் ஒப்பற்ற ஈவினால் தன்னைப் போல் என்னையும் தெய்வீகம் ஆக்குவார் சத்துருவாமென்னை தம் சொந்தமாக்கிய உத்தமர் இயேசுவின் உன்னத நேசமே 4.மணவாளன் இயேசுவின் மங்கள நாளதில் மணவாட்டி கூட்டத்தில் மாபாவி சேர்ந்திட கொடிய பாடுகள் குரூர யூதரால் காரணமின்றியே சகித்த தேசமே 5.ஜீவ கிரீடமும் ஜோதியாம் அங்கியும் நீதியின் செங்கோலும் தரித்து வாழ்ந்திட முள்முடி அணிந்து நிந்தையும் சகித்த மன்னாதி மன்னனின் மாறாத நேசமே 6.மீட்பின் சங்கீதங்கள் சீயோனில் பாடுவேன் மேலாக தூதரும் அப்பாடல் பாடிடார் கல்வாரி குன்றின் மேல் கைகாலறையுண்ட கர்த்தாதி கர்த்தரின் காதல் என் கீதமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naesatthaal En Ullam Pongkuthae Avvanpin Maatsimai Arivikkettumo Aa Enna Aazhamae Yesuvin Naesamae Adhan Thiyaanamae Jeeviya Paakkiyamae 1.loga Muntaakumun Ennaiyum Kantaarae Logatthil Vanthu Than Jeevanai Thanthaarae Unnatha Azhaippaal Thannotu Thangkida Ennai Thakuthiyaay Enniya Naesamae 2.seeyonil Enakkaay Moolaikkallaakiyae Seeyonil Ennaiyum Saertthonraay Kattiyae Maeloga Naadharin Vaelaiyai Mutittha Maelaana Sirpiyaam Yesuvin Naesamae 3.unnatha Anpennum Oppartra Eevinaal Thannaip Pol Ennaiyum Theyveegam Aakkuvaar Satthuruvaamennai Tham Sondhamaakkiya Utthamar Yesuvin Unnatha Naesamae 4.manavaalan Yesuvin Manggala Naalathil Manavaatti Koottatthil Maapaavi Saernthida Kotiya Paatugal Kuroora Yoodharaal Kaaranaminriyae Sakittha Thaesamae 5.jeeva Kireedamum Jothiyaam Angkiyum Neethiyin Sengkolum Tharitthu Vaazhnthida Mulmuti Aninthu Ninthaiyum Sakittha Mannaathi Mannanin Maaraadha Naesamae 6.meetpin Sangkeedhanggal Seeyonil Paatuvaen Maelaaga Thoodharum Appaadal Paatitaar Kalvaari Kunrin Mael Kaikaalaraiyunda Kartthaathi Karttharin Kaadhal En Keedhamae