பாடல் #335
ஆ எமக்காய் நல் ஓய்வுநாளை
🔤 Aa Emakkaay Nal Oyvunaalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ! எமக்காய் நல் ஓய்வுநாளை அன்பாய் அமைத்தார் என் பரனார். பூமியின் சோலையில் ஓய்வு கொள்ள பூலோக மீட்பரைப் போற்றிக் கொள்ள 1. ஆறுதல் பக்தியும் ஆவி மழை அன்பை எம்மை நினைத்திடவும் தேறுதல் கொண்டே ஓய்வுநாளை திறமாய் நலமாய் ஆசரிப்போம். 2. ஆவியின் பேரருள் வேண்டிடுவோம் ஆனந்தம் பேயினை வென்றிடுவோம் சாவை வென்று போனவரைச் சாற்றிப் போற்றிப் பாடிடுவோம். 3. என்னென்ன சோதனை வந்திடினும் ஏற்பாய் ஓய்வு காத்திடவும் மன்னனாம் தேவனின் கட்டளையை மன்னன் சொற்படி கைக்கொள்வோம். 4. ஸ்வாமி நின் தாசரை நோக்கிப் பாரும் பிள்ளைகளென்றே எண்ணிக் காரும் பரலோக ஓய்வில் களி கூர பரிசுத்த சபையாய்க் காத்துக் கொள்ளும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa! Emakkaay Nal Oyvunaalai Anpaay Amaitthaar En Paranaar. Poomiyin Solaiyil Oyvu Kolla Poologa Meetparaip Porrik Kolla 1. Aarudhal Pakthiyum Aavi Mazhai Anpai Emmai Ninaitthidavum Thaerudhal Kontae Oyvunaalai Thiramaay Nalamaay Aasarippom. 2. Aaviyin Paerarul Vaentituvom Aanandham Paeyinai Venrituvom Saavai Venru Ponavaraich Saarrip Porrip Paatituvom. 3. Ennenna Sodhanai Vanthitinum Aerpaay Oyvu Kaatthidavum Mannanaam Devanin Kattalaiyai Mannan Sorpati Kaikkolvom. 4. Svaami Nin Thaasarai Nokkip Paarum Pillaigalenrae Ennik Kaarum Paraloga Oyvil Kali Koora Parisuttha Sapaiyaayk Kaatthuk Kollum.