பாடல் #3344
பாவியாம் எனை
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
1.பாவியாம் எனை மேவிப்பார், ஐயா, - யேசுநாதா, ஸ்வாமி; பட்சமாக என் பாவந் தீர், ஐயா. 2.தேவத்ரோகி பாவி நான் அன்றோ, - யேசுநாதா, ஸ்வாமி; சீர்பதம் துணையன்றி வேறுண்டோ? 3.தீவினையுறு சாவு மேவிற்றே, - யேசுநாதா, ஸ்வாமி; சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே. 4.சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன், - யேசுநாதா, ஸ்வாமி; தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்? 5.மனது, வாக்கு, வினைகளில் எல்லாம, - யேசுநாதா, ஸ்வாமி; மாசுளோனாய்க் கூசினேன், ஐயா. 6.என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, - யேசுநாதா, ஸ்வாமி; என்செய்வேன்? மறு தஞ்சம் இல்லையே. 7.அலகையோடெனை உலகம் ஏய்க்குமே, - யேசுநாதா, ஸ்வாமி; ஆதரவில்லை, பாதுகா, ஐயா. 8.மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட - யேசுநாதா, ஸ்வாமி; வந்தெனது நிர்ப்பந்தம் பார், ஐயா.