பாடல் #3339
பாவி இன்றே திரும்பாயோ
🔤 Paavi Inrae Thirumpaayo
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி இன்றே திரும்பாயோ? - நேச ஆவியின் சத்தங் கேளாயோ? மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக் கூவி அழைக்கையில் தாவி யேசுவை நோக்கி 1. பாவம் தொடர்ந்து செல்லுமே தேவ கோபம் அடர்ந்து கொல்லுமே - உனின்ப லாபம் எல்லாமே சாபம் கால மீதுவே காலம் தாபம் உள உன் அன்பரின் பரிதாபம் கண்டு. 2. எத்தனை போதனை பெற்றாய்? ஐயையோ! சுத்தமாய் சாதனை அற்றாய் என்றாலும் அத்தனை பாவத்தையும் உத்தமமாய் வெறுத்து அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காருமென்று. 3. கல்வாரியில் தொங்கினோர் யார்? உனக்கல்லோ நேசர் ஏங்கினார் பார் இன்னும் பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகி சொல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான. 4. நிலையற்றலைகின்றாரே இரத்த விலை மதியாமல் சென்றாரே போதும் மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி கலையான வேதம்கற்று நிலையான ரட்சை பெற.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi Inrae Thirumpaayo? - Naesa Aaviyin Satthang Kaelaayo? Maevi Thayai Nirampi Aevi Unai Virumpik Koovi Azhaikkaiyil Thaavi Yaesuvai Nokki 1. Paavam Thodarnthu Sellumae Thaeva Kobam Adarnthu Kollumae - Uninba Laabam Ellaamae Saabam Kaala Meethuvae Kaalam Thaabam Ula Un Anbarin Parithaabam Kantu. 2. Etthanai Podhanai Perraay? Aiyaiyo! Sutthamaay Saadhanai Arraay Enraalum Atthanai Paavatthaiyum Utthamamaay Verutthu Atthanae Thattham Seythaen Nitthamum Kaarumenru. 3. Kalvaariyil Thongkinor Yaar? Unakkallo Naesar Aengkinaar Paar Innum Pollaa Manathudanae Kalpol Katinamaaki Solvoraiyum Ninthitthu Ellaak Kaettukkullaana. 4. Nilaiyartralaikinraarae Rattha Vilai Mathiyaamal Senraarae Pothum Malaiyaamal Yaesuvidam Tholaiyaadha Kavalai Solli Kalaiyaana Vaedhamkarru Nilaiyaana Ratsai Pera.