பாடல் #3330
பாவி இன்றே
🔤 Paavi Inrae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி, இன்றே திரும்பாயோ? - நேச ஆவியின் சத்தம் கேளாயோ? மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக் கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி - பாவி 1.பாவம் தொடர்ந்து செல்லுமே; - பாவ சாபம் அடர்ந்து கொல்லுமே; - உனின்ப லாபம் எல்லாமே சாபம்; காலமிதுவே காலம்; தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு - பாவி 2.எத்தனை போதனை பெற்றாய் - ஐயையோ! சுத்தமாய்ச் சாதனை அற்றாய், - என்றாலும் அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து, அத்தனே, தத்தம் செய்தேன், நித்தமும் காவுமென்று - பாவி 3.கல்வாரியில் தொங்கினோர் யார்? - உனக் கல்லோ நேசர் ஏங்கினோர் பார்! - இன்னும் பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகிச் செல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான - பாவி 4.நிலை யின்றலை கின்றோரே - ரத்த விலை மதியாமல் சென்றோரே, - போதும்; மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி, உலையா நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற - பாவி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi, Inrae Thirumpaayo? - Naesa Aaviyin Sattham Kaelaayo? Maevi Thayai Nirampi Aevi Unai Virumpik Koovi Azhaikkaiyilae Thaavi Yaesuvai Nokki - Paavi 1.paavam Thodarnthu Sellumae; - Paava Saabam Adarnthu Kollumae; - Uninba Laabam Ellaamae Saabam; Kaalamithuvae Kaalam; Thaabam Ulavun Yaesu Maa Parithaabam Kantu - Paavi 2.etthanai Podhanai Perraay - Aiyaiyo! Sutthamaaych Saadhanai Arraay, - Enraalum Atthanai Paavatthaiyum Murrumaaga Verutthu, Atthanae, Thattham Seythaen, Nitthamum Kaavumenru - Paavi 3.kalvaariyil Thongkinor Yaar? - Unak Kallo Naesar Aengkinor Paar! - Innum Pollaa Manathudanae Kalpol Katinamaakich Selvoraiyum Ninthitthu Ellaak Kaettukkullaana - Paavi 4.nilai Yindralai Kinrorae - Rattha Vilai Mathiyaamal Senrorae, - Pothum; Malaiyaamal Yaesuvidam Tholaiyaadha Kavalai Solli, Ulaiyaa Nampikkai Vaitthu Nilaiyaana Ratsaipera - Paavi