பாடல் #3328
பாவம் போக்கும் ஜீவநதியை
🔤 Paavam Pokkum Jeevanathiyai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர், வந்து பாரீர் - பாரில்! தீவினை தீர்க்கும் தேவமறியின் திருரத்த மிந்த ஆறாம், - பாரில்! - பாவம் 1.கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக் கண்கள் ஐந்து திறந்தே; - அதோ! மல்கிச் சிலுவை யடியில் விழுந்து வழிந்தோடுவது பாரீர், - பாரில்! - பாவம் 2.பாவச்சுமையால் நொந்து சோர்ந்து பதறி விழுந் தலறி - நிதம் கூவியழுத அனந்தம் பேரிதில் குளித்தே யுளங் களித்தார், - பாரில்! - பாவம் 3.பத்தருளத்தி லிடைவிடாமல் பாய்ந்து வளமீந்து - அதை நித்தமும் பரிசுத்த குணத்தில் நிலைநாட்டுது பாரீர், - பாரில்! - பாவம் 4.ஒருமுறை இந்த நதியின் தீர்த்தம் உண்டோர் ஜீவன் கண்டோர், - தாகம் அறுதி யடைவர்; வேறொருநதிக் கலையார், தேடி யலையார், - பாரில்! - பாவம் 5.நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந் நீரார் நதியிதிலே - தங்கள் வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில் வாழ்ந்துகீதம் பாட, - பாரீல்! - பாவம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Pokkum Jeevanathiyaip Paareer, Vanthu Paareer - Paaril! Theevinai Theerkkum Thaevamariyin Thirurattha Mindha Aaraam, - Paaril! - Paavam 1.kalvaari Malaichsigara Meethoorruk Kankal Ainthu Thiranthae; - Atho! Malkich Siluvai Yatiyil Vizhunthu Vazhinthotuvathu Paareer, - Paaril! - Paavam 2.paavachsumaiyaal Nonthu Sornthu Pathari Vizhun Thalari - Nidham Kooviyazhudha Anandham Paerithil Kulitthae Yulang Kalitthaar, - Paaril! - Paavam 3.pattharulatthi Litaivitaamal Paaynthu Valameenthu - Athai Nitthamum Parisuttha Kunatthil Nilainaattuthu Paareer, - Paaril! - Paavam 4.orumurai Indha Nathiyin Theerttham Untor Jeevan Kantor, - Thaagam Aruthi Yataivar; Vaerorunathik Kalaiyaar, Thaeti Yalaiyaar, - Paaril! - Paavam 5.nitthiyandhanil Kalanthuraiyunj Sen Neeraar Nathiyithilae - Thanggal Vasthiran Thoyttha Sutthar Sapaiyil Vaazhnthukeedham Paada, - Paareel! - Paavam