பாடல் #3323
பாவம் செய்யாதே நீ
🔤 Paavam Seyyaathae Nee
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதே காவல் நின்று பார்ப்பாரென்று கருத்தாய் மனதில் நினைத்தே இரு - பாவம் எப்பொழுது சாவு வரும் என்றறியாயே இப்பொழுதே நீ திரும்பி ஏசு மேசியாவை நம்பு - பாவம் பெற்ற தாலந்துகளை நீ பேணாமல் போனால் குற்றவாளி என்றே தேவன் கோபம் கொள்வார் லாபம் பண்ணு - பாவம் நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம் கர்த்தர் எழுதி வைத்திருக்கும் கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ - பாவம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Seyyaathae Nee Paavam Seyyaathae Paavam Seyyaathae Nee Paavam Seyyaathae Devan Sonna Karpanai Meerith Theemai Seyyaathae Kaaval Ninru Paarppaarenru Karutthaay Manathil Ninaitthae Iru - Paavam Eppozhuthu Saavu Varum Endrariyaayae Ippozhuthae Nee Thirumpi Aesu Maesiyaavai Nampu - Paavam Pertra Thaalanthugalai Nee Paenaamal Ponaal Kurtravaali Enrae Devan Kobam Kolvaar Laabam Pannu - Paavam Nittham Nittham Nee Purindha Nin Paavamellaam Kartthar Ezhuthi Vaitthirukkum Kanakkil Vazhakkil Irukkumallo - Paavam