பாடல் #332
ஆ யேசுவே உம்மாலே நான்
🔤 Aa Yaesuvae Ummaalae Naan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ யேசுவே! உம்மாலே நான் மீட்கப்பட்டேன் உம் திவ்ய ரத்தத்தாலே நான் சுத்தமானவன் மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர் அருமைச் சாவினாலே நீர் என்னை ரட்சித்தீர். 2. நான் உம்மால் என்றும் வாழ இப்பந்தியில் நீரே என் ஆவிக் கேற்றதான அமிர்தம் தந்தீரே உம் ஆசீர்வாதம் ரூடவ்ந்து என் பாவம் மன்னியும் அன்போடு என்னைச் சேர்த்துத் தயாளம் காண்பியும். 3. நீர் இன்னும் என்னில் காணும் பொல்லாங்கு யாவையும் அகற்றிப் போட வாரும் என் நெஞ்சில் தங்கிடும் நான் உம்மைப் பற்றிக் கொள்ளக் கருணை புரியும் மிகுந்த தாழ்மையுள்ள சித்தம் கடாட்சியும். 4. நல் மீட்பரே! உம்மோடு நான் ஐக்கியமாகவும் நாடோறும் வாஞ்சையோடு உம்மண்டை தங்கவும் மிகுந்த அன்பினாலே துணை செய்தருளும் தெய்வீக அப்பத்தாலே நீர் என்னைப் போஷியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa Yaesuvae! Ummaalae Naan Meetkappattaen Um Thivya Ratthatthaalae Naan Sutthamaanavan Mikundha Kasthiyaalae En Thoshatthaith Theerttheer Arumaich Saavinaalae Neer Ennai Ratsittheer. 2. Naan Ummaal Enrum Vaazha Ippanthiyil Neerae En Aavik Kaertrathaana Amirtham Thantheerae Um Aaseervaadham Roodavnthu En Paavam Manniyum Anpotu Ennaich Saertthuth Thayaalam Kaanpiyum. 3. Neer Innum Ennil Kaanum Pollaangku Yaavaiyum Agarrip Poda Vaarum En Nenjsil Thangkitum Naan Ummaip Parrik Kollak Karunai Puriyum Mikundha Thaazhmaiyulla Sittham Kataatsiyum. 4. Nal Meetparae! Ummotu Naan Aikkiyamaagavum Naatorum Vaanjsaiyotu Ummantai Thanggavum Mikundha Anpinaalae Thunai Seytharulum Theyveega Appatthaalae Neer Ennaip Poshiyum.