பாடல் #3317
பாவத்தின் பாரத்தினால்
🔤 Paavatthin Paaratthinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசு நாதா (2) கெட்ட குமாரனைப் போல் துஷ்டனாய் அலைந்தேனையா நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே (2) கள்ளனாயினும் நான் நீர்; பெற்ற பிள்ளையல்லோ கள்ளனுக் அருள் செய்த நீர்; தள்ளாத சிலுவை நாதா (2) பாவி மரியாளையும் நன்றியற்ற பேதுருவையும் அருள் செய்த ஆண்டவனே கிருபை கூர்; என் ஐயனே (2) உம்மோடு வருடங்களாய் உணவுண்ட யூதாசைப் போல் கறையற்ற தந்தை உம்மை வஞ்சித்தேன் இயேசு நாதா (2) தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ மனங்கசிந்து நொந்து கண்ணீரைத் துடைத்திடுமே (2) அறையுண்ட சிலுவையினின்று அணைத்திட வாருமையா நின் பாதம் வீழ்ந்தேனையா சமதானம் தாருமையா (2) தந்தை தாய் தாமரெல்லாம் என்னைக் கைவிடுவார்;கள் சாகும் நாளில் தாங்குவார்; நீரல்லால் யாருமில்லை (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavatthin Paaratthinaal Thavitthitum Paavi Ennai Nin Kirupai Piravaagatthaal Thaerritum Yesu Naathaa (2) Ketta Kumaaranaip Pol Thushtanaay Alainthaenaiyaa Nin Anpai Unaraamal Thurogam Naan Seythaenae (2) Kallanaayinum Naan Neer; Pertra Pillaiyallo Kallanuk Arul Seytha Neer; Thallaadha Siluvai Naathaa (2) Paavi Mariyaalaiyum Nanriyartra Paethuruvaiyum Arul Seytha Aandavanae Kirupai Koor; En Aiyanae (2) Ummotu Varudanggalaay Unavunda Yoothaasaip Pol Karaiyartra Thanthai Ummai Vanjsitthaen Yesu Naathaa (2) Thanthaiyai Vitta Pinpu Thavituthaan Aakaaramo Mananggasinthu Nonthu Kanneeraith Thutaitthitumae (2) Araiyunda Siluvaiyininru Anaitthida Vaarumaiyaa Nin Paadham Veezhnthaenaiyaa Samathaanam Thaarumaiyaa (2) Thanthai Thaay Thaamarellaam Ennaik Kaivituvaar;kal Saakum Naalil Thaangkuvaar; Neerallaal Yaarumillai (2)