பாடல் #3313
பாவக் குஷ்டம் பெலவீனம் நீங்கிப்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. பாவக் குஷ்டம் பெலவீனம் நீங்கிப் பாவி ஓடி வா யேசு உன்னை ரட்சிக்கவே கவலையாய் நிற்கிறார். ரட்சிப்பைத் தேடு கர்த்தரைச் சேர் அவர் நாமத்தைப் போற்று கர்த்தர் ஆள வருகிறார் கனம் புகழ் அவர்க்கே. 2. உன்னை அன்பாய் அழைக்கிறார் உத்தம விஸ்வாசமும் உன் பாவ மனஸ்தாபமும் சேர்க்கும் ஜீவ பாதையில். 3. கனாவில் அவர் காட்டட்டும் நான் தகுதி என்பதை என்று எண்ணிப் பின்வாங்கியே நில்லாதே நீ பாவியே! 4. களைத்து நொந்த பாவியே! கர்த்தர் தஞ்சம் உணரு காலம் கடத்தி நிற்காதே வீண் யோசனை செய்யாதே.