பாடல் #3305
பாலியர் சங்கத் தோழர்களே
🔤 Paaliyar Sanggath Thozharkalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலியர் சங்கத் தோழர்களே! பரனேசையனைத் துதித்திடுவோம். பாலரை அவர் திருக்கரமெடுத்து பண்பாய் அணைத்தாசீர்வதித்தார். 1. பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தார் பிரியம் போல நடந்து கொண்டார் முற்றிலுமவர் அடிச்சுவடுகளை முன்மாதிரியாய்க் கொண்டு செல்வோம். 2. தேவாலயத்தை மிக ஆசித்தார் தேவ வசனத்தை வாசித்தார் ஆவலாய் அவர் திருவடி தொடர்ந்தே அதுபோல செய்வோம் அகமகிழ்ந்தே. 3. ஞானத்திலும் தேவ தயவிலுமே நாதன் வளர்ந்தார் அனுதினமே வானபரன் அருள் கிருபையினால் மலையாதவர் திருவடி தொடர்வோம். 4. பாலியர் நம்மையும் நேசிக்கிறார் பாவ மன்னிப்பு அருளுகிறார் மேலுலகந் தர விரும்புகிறார் விலகா தவர் திருவடி தொடர்வோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaliyar Sanggath Thozharkalae! Paranaesaiyanaith Thuthitthituvom. Paalarai Avar Thirukkarametutthu Panpaay Anaitthaaseervathitthaar. 1. Perrorukkuk Keezhppatinthaar Piriyam Pola Natanthu Kontaar Murrilumavar Atichsuvatugalai Munmaathiriyaayk Kontu Selvom. 2. Thaevaalayatthai Miga Aasitthaar Thaeva Vasanatthai Vaasitthaar Aavalaay Avar Thiruvati Thodarnthae Athupola Seyvom Agamakizhnthae. 3. Njaanatthilum Thaeva Thayavilumae Naadhan Valarnthaar Anuthinamae Vaanaparan Arul Kirupaiyinaal Malaiyaadhavar Thiruvati Thodarvom. 4. Paaliyar Nammaiyum Naesikkiraar Paava Mannippu Arulukiraar Maelulakan Thara Virumpukiraar Vilakaa Thavar Thiruvati Thodarvom.